தமிழக அரசின் மூலமாக கலைஞர் கடன் உதவி திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கப்பட்டு வருகின்றது இந்த திட்டத்தின் பலன் குறித்து பார்ப்போம்.
தமிழகத்தில் சிறு, குறு நிறுவனங்கள் ஏராளமானவை செயல்பட்டு வருகின்றது. இவை அனைத்துக்கும் உதவும் நோக்கில் அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் தொடர்பாக இப்போது பார்ப்போம்.
சிறு குறு நிறுவனங்களுக்கு உதவி செய்யும் வகையில் கலைஞர் கடன் உதவி திட்டம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் குறைந்த வட்டியில் கடன் பெறலாம். தமிழக அரசின் கீழ் தொழில் கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகின்றது. இந்த தாய்க்கோ வங்கி கிளைகளில் குறைந்த வட்டி விகிதத்தில் 20 லட்சம் வரை நம்மால் கடன் வாங்க முடியும். அதிலும் மிகக் குறைந்த வட்டியில் சிறு குறு உற்பத்தி நிறுவனங்கள் மிகக் குறைவாக 7 சதவீத வட்டி விகிதத்தில் இந்த கடனை கலைஞர் கடன் உதவி திட்டம் மூலமாக பெற முடியும்.
அசையா சொத்துக்களை அடமானமாக வைத்து குறு உற்பத்தி நிறுவனங்கள் இந்த கடனை வாங்க முடியும். இந்த திட்டத்தின் பலனை பெறுவதற்கு விண்ணப்பதாரர்கள் குறைந்தது 18 வயது முதல் 65 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஏற்கனவே இயங்கி வரும் புதிய குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில் முனைவோர்களின் சிபில் ஸ்கோர் 600 புள்ளிகள் இருக்க வேண்டும். இல்லையெனில் கடன் கொடுக்கப்பட மாட்டாது .
ஏற்கனவே அதிக வட்டிக்கு மற்றும் நிறுவனங்களிடம் இருந்து கடன் வாங்கியவர்கள் விதிமுறைக்கு உட்பட்டு குறைந்த வட்டிக்கு கடனை பெற்றுக் கொள்ளலாம். இது குறித்து தாய்க்கோ வங்கி தலைமைச் செயல் அதிகாரி ஆர் ரவிச்சந்திரன் தெரிவிக்கும்போது குரறு தொழில் நிறுவனங்களுக்கு எளிதில் கடன் கிடைக்க வேண்டும் என்பதற்காக கலைஞர் கடன் உதவி திட்டத்தை சட்டசபையில் அறிவித்திருந்தார்.
நடப்பு நிதி ஆண்டில் இந்த திட்டத்திற்காக 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்கின்றது. தாய்க்கோ வங்கி வாயிலாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. இந்த வங்கியின் அனைத்து கிளைகளிலும் கலைஞர் கடன் உதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனை பயன்படுத்தி கடன் வேண்டுபவர்கள் வங்கி கிளை மேலாளர்களை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…