Connect with us

latest news

உங்க வீட்டில பெண் குழந்தை இருக்கா…? அவங்களுக்கான சூப்பரான திட்டம்… தமிழ்நாடு தான் முதலிடம்..!

Published

on

பெண் குழந்தைகளுக்கு சிறந்த முதலீடு திட்டமான செல்வமகள் திட்டம் குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.

உங்கள் வீட்டில் பெண் குழந்தை இருந்தால் அவர்களுக்கு ஒரு சிறந்த திட்டம் சுகன்யா சம்ரிதி யோஜனா. பெண் குழந்தைகளுக்கான ஒரு சிறந்த திட்டமாக இது விளங்குகின்றது. இந்த திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகளின் எதிர்கால கல்வி மற்றும் திருமண செலவுகளை பெற்றோர்கள் எளிதில் சமாளிக்க முடியும். சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் தமிழகத்தில் செல்வமகள் திட்டம் என்கின்ற பெயரில் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

மத்திய அரசால் பெண் குழந்தைகளுக்காக துவங்கப்பட்ட இந்த திட்டம் பெண் குழந்தைகள் பிறந்து 10 வருடங்கள் வரை எப்போது வேண்டுமானாலும் தொடங்கலாம். மொத்தம் 250 ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 வரை இந்த திட்டத்தில் நாம் முதலீடு செய்யலாம். 15 ஆண்டுகளுக்கு பணத்தை முதலீடு செய்யும்போது 21 வருடங்கள் கழித்து இந்த திட்டம் முதிர்ச்சி அடையும்.

18 வயதை பெண் குழந்தைகள் அடையும் போது கல்வி செலவுக்கு முதலீட்டில் இருந்து பாதி தொகையை எடுத்துக் கொள்ளும் வசதியும் இருக்கின்றது. இந்த திட்டத்தில் இணைய பெண் குழந்தைகள் பிறந்து பத்து ஆண்டுகளில் பெற்றோர்கள் அல்லது அதிகாரப்பூர்வ பாதுகாவலர்கள் இந்த கணக்கை திறக்க முடியும். அதிகபட்சம் வீட்டில் இரண்டு பெண் குழந்தைகளுக்கு மட்டுமே இந்த கணக்கை திறக்க முடியும்.

மேலும் இந்த திட்டத்திற்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகின்றது. தமிழகத்தை பொறுத்தவரை செல்வமகள் சேமிப்பு திட்டம் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இந்த திட்டத்தில் இணைவதற்கு பெண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்கள் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்கள். கடந்த ஆண்டு வரை தமிழகத்தில் செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் 32.57 புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதல் 11-ம் தேதி அஞ்சல் வாரம் கொண்டாடப்பட்டது. இதில் தமிழகத்தில் செல்வமகள் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவதாக அறிவிக்கப்பட்டது. எட்டாவது ஆண்டாக தமிழகம் முதல் இடத்தை பிடித்திருக்கின்றது. செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஒருவர் மாதம் தோறும் 5000 ரூபாய் டெபாசிட் செய்யும் போது ஒரு வருடத்தில் முதலீட்டு தொகை 60 ஆயிரம் ரூபாய் இருக்கும்.

15 வருடத்தில் 9 லட்சம் முதலீடு செய்து இருந்தால் இந்த திட்டத்திற்கு வருடத்திற்கு 8 புள்ளி 2 சதவீதம் கூட்டு வட்டி வழங்குவதால் இதற்கான தொகையை 18 புள்ளி 92 லட்சம் ரூபாயாக இருக்கும். இதன் மூலம் முதலீட்டாளர்கள் முதிர்வு தொகையாக 27.92 லட்சம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *