பெண்கள்தான் நாட்டின் கண்கள் என்பது அனைவரும் அறிந்ததே. பெண்ணானவள் தனது வாழ்வில் பல சூழ்நிலைகளை கடந்து வரவேண்டியுள்ளது. அப்படிப்பட்ட பெண் குழந்தைகளுக்கென கொண்டு வரப்பட்ட திட்டம்தான் செல்வமகள் சேமிப்பு திட்டம்(Suganya Samriddhi Yojana). ஒரு குடும்பத்தில் அதிகபட்சமாக இரண்டு பெண் குழந்தைகள் இருப்பவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம்.
எவ்வாறு இணைவது?:
இத்திட்டத்தில் சேர பெற்றோர் அல்லது பாதுகாவலர் வங்கியிலோ அல்லது அஞ்சலகத்திலோ கணக்கினை வைத்திருக்க வேண்டும். அவர்களின் மூலம் இத்திடத்தில் கணக்கினை ஆரம்பிக்கலாம்.
செலுத்த வேண்டிய தொகை:
இத்திட்டத்தில் குறைந்தபட்ச தொகையாக ஆண்டுக்கு ரூ. 250 ம் அதிகபட்சமாக ரூ. 1.5 லட்சமும் செலுத்தலாம். மேலும் இந்த தொகையை 300, 350, 400, 450 என 50ன் மடங்காகவும் செலுத்தி கொள்ளலாம்.
எத்தனை ஆண்டுகள் செலுத்த வேண்டும்:
இந்த கணக்கை பெண் குழந்தைகள் 10 வயது அடையும் வரை தொடங்கலாம். இந்த கணக்கு தொடங்கி 15 ஆண்டுகள் வரை இந்த கணக்கில் பணம் செலுத்த வேண்டும். ஒருவேளை நாம் பணம் செலுத்த தவறினால் ரூ50 அபராதமாக செலுத்தி எவ்வளவு ஆண்டுகள் செலுத்தவில்லையோ அத்தனை ஆண்டிற்கான குறைந்தபட்ச தொகையக் செலுத்தலாம்.
வட்டி விகிதம்:
செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 8.0% ரூபாயை நாம் வட்டி விகிதமாக பெறலாம். மேலும் இக்கணக்கில் இருந்து குழந்தை 12ஆம் வகுப்பு முடித்த பின் தனது மேற்படிப்பிற்காக 50% பணத்தை எடுத்து கொள்ளலாம். தனது 21ஆம் வயதில் திருமணத்திற்காக மீதியுள்ள பணத்தை எடுத்து கொள்ளலாம். இத்துடன் இந்த கணக்கானது முடிவடையும்.
வரிச் சலுகை:
இத்திட்டதின் முலம் நாம் வருமான வரி சட்டத்தின் கீழ் வரிசலுகையும் பெறலாம்.
முன்கூட்டியே பணத்தை எடுக்கலாமா?:
இந்த கணக்கு வைத்திருக்கும் நபர் ஒருவேளை இறந்துவிட்டாலோ அல்லது ஏதேனும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலோ இந்த கணக்கை மூடி கொள்ளலாம். ஆனால் குறைந்தபட்சமாக கணக்கை தொடங்கி 5 ஆண்டுகள் ஆகியிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படிப்பட்ட வரிச்சலுகை பெரும்பாலும் அரசு கொண்டுவரும் அனைத்து திட்டங்களுக்கும் இருப்பதில்லை. மேலும் இந்த திட்டத்தில் வரும் வட்டி விகிதமும் மற்ற திட்டங்களை காட்டிலும் சற்று அதிகம்தான். எனவே நமது வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தால் இப்படியான மிகசிறந்த திட்டங்களில் சேர்ந்து பயனடையலாம்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…