latest news
தினமும் 95 ரூபாய் சேமியுங்க… 14 லட்சம் வரை கிடைக்கும்… அசத்தலான சேமிப்பு திட்டம்…!
தினமும் 95 ரூபாய் சேமித்தால் 14 லட்சம் வரை லாபம் கிடைக்கும் சுமங்கல் கிராமின் தக் ஜீவன் பீமா யோஜனா திட்டம் குறித்து இதில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் ஏதாவது ஒன்றில் தங்களது சேமிப்புகளை முதலீடு செய்து வருகிறார்கள். வங்கிகளை போல தபால் அலுவலகமும் ஏராளமான முதலீட்டு மற்றும் சேமிப்பு திட்டங்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றது. அந்த வகையில் தபால் துறை செயல்படுத்தி வரும் ஒரு திட்டம்தான் சுமங்கல் கிராமின் ஜீவன் பீமா யோஜனா திட்டம் போஸ்ட் ஆபீஸ் திட்டங்களுக்கு வங்கிகளில் கூட கிடைக்காத அளவிற்கு கூடுதல் வட்டி கிடைத்து வருகின்றது.
இதனால் மக்கள் அனைவரும் போஸ்ட் ஆபீஸில் உள்ள திட்டங்களில் இணைவதற்கு அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். போஸ்ட் ஆபீஸில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் ஒரு திட்டம் தான் சுமங்கல் கிராமின் தக் ஜீவன் பீமா யோஜனா திட்டம். இது ஆயுள் காப்பீடு மற்றும் பிற பலன்களை வழங்கும் திட்டமாகும்.
கிராமப்புறங்களில் வசிப்பவர்களை கருத்தில் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் வெறும் 95 ரூபாய் முதலீடு செய்வதன் மூலமாக 14 லட்சம் வரை முதிர்வு தொகை பெற முடியும். இந்த திட்டத்தில் காப்பீட்டுதாரர் எதிர்பாராத விதமாக உயிரிழந்தால் மொத்த உத்திரவாத தொகையும் போனஸ் உடன் சேர்த்து அவரின் வாரிசு அல்லது நாமினிக்கு வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் பாலிசிக்கான காலம் 40 ஆண்டுகள். இதில் முதலீடு செய்வதற்கு குறைந்தபட்ச வயதானது 19 அதிகபட்சமாக 20 வயது வரை இருக்கலாம். 15 ஆண்டுக்கு பாலிசிக்கு 45 வயது வரை உள்ளவர்கள் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் இருந்து முதலீட்டாளருக்கு பணம் கிடைக்கும் வகையில் போனஸ் பெற முடியும். இந்த திட்டத்தில் தினமும் ரூபாய் 95 சதவீதம் மாதத்தவனையாக ரூபாய் 2,853 செலுத்த வேண்டும்.
முதலீட்டாளர் தனது 25 வயதில் முதலீடு செய்ய ஆரம்பிக்கும்போது பாலிசி காலம் 20 ஆண்டுகளாக இருக்கும். 7 லட்சம் மொத்த உத்தரவாத தொகை. இதில் ஆண்டுக்கு ரூ. 32,735 செலுத்தி வந்தால் முதிர்ச்சியின் போது நமக்கு 14 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதே பாலிசியில் மூன்று மாத அடிப்படையில் ரூ. 8,850 ரூபாய் மற்றும் 6 மாதம் அடிப்படையில் 17,100 முதலீடு செய்தால் இதன் மூலமாகவும் 14 லட்சம் ரூபாயை முதிர்வு தொகையாக நாம் பெறலாம்.