போஸ்ட் ஆஃபீஸில் மாதம் மாதம் சிறந்த வருமானம் தரக்கூடிய டெபாசிட் திட்டம் குறித்து இந்த தொகுப்பில் தெரிந்து கொள்வோம்.
இன்றைய சூழலில் பலரும் சேமிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். எதிர்காலத்திற்கு சரியாக திட்டமிட்டு சேமிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். அவ்வாறு முதலீடு செய்ய விரும்புபவர்களுக்காக போஸ்ட் ஆபீஸில் பலவிதமான சிறுசேமிப்பு திட்டங்கள் செயல்பட்டு வருகின்றது. தபால் நிலையத்தில் உத்தரவாதமான வருமானம் கிடைக்கும் என்பதால் அனைவரும் தங்களது பணத்தை போஸ்ட் ஆபீஸில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
பலரும் போஸ்ட் ஆபீஸ் சேவிங் திட்டத்தில் டெபாசிட் செய்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். ஓய்வுக்கு பிறகு யாருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் வாழ்வதற்காகவும் நிம்மதியான எதிர்கால வாழ்விற்காகவும் சம்பாதிக்கும் அனைவரும் சேமிக்க வேண்டியது மிகவும் முக்கியம். நீங்கள் ஆயிரத்திலோ அல்லது லட்சத்திலோ சம்பாதித்தாலும் அதில் ஒரு பகுதியை சேமிப்பது பாதுகாப்பான வாழ்விற்கு உத்தரவாதமாக இருக்கும்.
போஸ்ட் ஆபீஸ்கள் வங்கிகளில் சேமிக்க விரும்புபவர்களுக்கு ஏராளமான சிறுசேமிப்பு திட்டங்கள் செயல்பட்டு வருகின்றது. போஸ்ட் ஆபீசில் பிரபலமான திட்டங்களில் ஒன்று மாதாந்திர வருமான திட்டம். இதில் ஒரு முறை நீங்கள் முதலீடு செய்தால் போதும் இதன் மூலம் மாதம் வருமானம் கிடைக்கும். போஸ்ட் ஆபீஸ் மாதாந்திர வருவாய் திட்டத்தில் ஒரேடியாக 9 லட்சம் முதலீடு செய்யும்போது மாதம் தோறும் உங்களுக்கு ரூ.9,250 வருமானமாக கிடைக்கும்.
இதனை தம்பதியாக இணைந்து டெபாசிட் செய்யும்போது 15 லட்சம் முதலீடு செய்தால் இதன் மூலம் அதே தொகையை நீங்கள் வருமானமாக பெற முடியும். குறைந்தபட்சமாக 1000 டெபாசிட் செய்து இதை திட்டத்தில் நீங்கள் இணையலாம். மாதாந்திர வருமான திட்டத்திற்கு தபால் நிலையங்களில் 7.4 % வட்டி வழங்கப்படுகின்றது.
இந்த திட்டத்தில் இணைவதன் மூலமாக ஓய்வுக்கு பிறகு வருமானத்தை இழக்காமல் சிறந்த வாழ்க்கையை வாழ முடியும். மாதாந்திர வருமான திட்டத்திற்கு போஸ்ட் ஆபீஸில் அதிக வட்டி வழங்கப்படுகின்றது. தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டத்தின் முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகளாகும். முதலீட்டாளர்கள் விரும்பினால் 15 வருடமாக அதனை நீட்டிக்கலாம். இதில் முன்கூட்டியே கணக்கை மூடும் வசதி இருக்கின்றது. ஒருவருடம் கழித்து இந்த திட்டத்தில் நாம் பணத்தை எடுத்துக் கொள்ள முடியும். 3 வருடங்களுக்குள் பணத்தை எடுத்தால் 2 சதவீதம் அபராதமாக செலுத்த வேண்டி இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…