வங்கதேசம் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான டெஸ்ட் தொடர் வங்கதேசம் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது, வங்கதேசம் பந்துவீச்சாளர் வேகமாக வீசிய பந்து, ஸ்டம்ப்களை தாக்காமல், கிரீஸுக்குள் ஓடிக்கொண்டிருந்த தென் ஆப்பிரிக்கா அணி பேட்டர்-ஐ அடித்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.
ஆட்டத்தின் 69வது ஓவரை மஹ்முத் வீசினார். இவர் வீசிய லோ-ஃபுல் டாஸ் பந்தை எதிர்கொண்ட தென் ஆப்பிரிக்க பேட்டர் டேன் அதனை நேராக செல்லும் வகையில் அடித்தார். பந்து நேரடியாக பந்துவீச்சாளரிடம் செல்வதற்குள் டேன் ரன் ஓட ஆரம்பித்தார். மறுமுனையில் கைல் ரன் ஓடாமல் பந்தை பார்த்துக் கொண்டிருந்தார். பந்து நேராக பந்துவீசிய மஹ்முத் கையில் சிக்கியது.
உடனே சுதாரித்துக் கொண்ட மஹ்முத் பந்தை வீசி, டேன்-ஐ ரன் அவுட் செய்ய முயற்சித்தார். இதை பார்த்ததும் டேன் கிரீஸுக்குள் ஓடிக் கொண்டிருந்தார். மஹ்முத் வீசிய பந்து ஸ்டம்ப், விக்கெட்ட கீப்பரை தவிர்த்து நேரடியாக டேன்-ஐ தாக்கியது. மஹ்முத்-இன் மோசமான த்ரோ, எதிரணி வீரரை தாக்கியதோடு வங்கதேச ஃபீல்டர்களையும் கோபம் கொள்ள செய்தது.
தற்போதைய நிலவரப்படி தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்ஸில் 308 ரன்களை அடித்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் அந்த அணி 202 ரன்கள் முன்னிலை பெற்றது. இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸில் ஆடி வரும் வங்கதேசம் அணி துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறுகிறது. மேலும், இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது.
இன்று காலை முதல் செஷன் வரையிலான நிலவரப்படி வங்கதேசம் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்களை அடித்துள்ளது. அந்த அணியின் ஜாகெர் அலி 24 ரன்களுடனும், மெஹிடி ஹாசன் 48 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…