நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததற்கு கடும் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இந்திய அணி தோல்விக்கு, கேப்டன் ரோகித் சர்மா காட்டமான கருத்துக்களை எதிர்கொண்டு வருகிறார். 37 வயதான ரோகித் சர்மா இந்திய அணிக்கு ஐ.சி.சி.யின் டி20 உலகக் கோப்பையை கடந்த ஜூன் மாதம் வென்றுக் கொடுத்தார். அதன்பிறகு வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றினார்.
இந்த வரிசையில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்ட இந்திய அணி பல்வேறு தவறான முடிவுகள் மற்றும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த தவறியதால் தோல்வியை தழுவியது. இதல் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி, தொடரில் முன்னிலையும் பெற்றுள்ளது.
இது குறித்து பேசிய இந்திய அணியின் முன்னாள் வீரர், விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் நியூசிலாந்து அணிக்கு எதிரான தோல்விக்கு கேப்டன் ரோகித் சர்மா எடுத்த முடிவுகளும் காரணமாக அமைந்தது என தெரிவித்துள்ளார். போட்டியில் அவர் ஆதிக்கம் செலுத்த தவறியதாகவும், சூழ்நிலைக்கு ஏற்ற தலைவராகவே இருந்தார் என்றும் சாடியுள்ளார்.
“அவரது ஆட்டம் சிறப்பானதாக இல்லை. அவர் மிக கடினமான டெஸ்ட் போட்டியை கடந்துள்ளார், எனினும் அவரால் முடிந்தவற்றை செய்சுள்ளார். அவர் மீது நிறைய அழுத்தம் இருந்ததை என்னால் பார்க்க முடிந்தது. மேலும் அவர் அதிக ரன்கள் எடுக்கவில்லை என்பதையும் கூற வேண்டும். ஒட்டுமொத்தமாக, இது ஒரு சிறந்த டெஸ்ட் போட்டியாக இல்லை. அவர் இதை பரிசீலனை செய்வார், இன்னும் என்ன சிறப்பாக செய்திருக்க முடியும்? என்று நினைப்பார்.”
“ஒரு மெல்லிய கோடு உள்ளது, இந்த டெஸ்ட் போட்டி அவர் பந்தை துரத்தி கொண்டிருந்தார். அவர் தன்னால் முடிந்த அனைத்தையும் முயற்சித்தார், ஆனால் அது அவருக்கும், இந்திய அணிக்கும் சிறந்த போட்டியாக அமையவில்லை என்றே சொல்ல வேண்டும்,” என்று அவர் கூறினார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…