பீக்-ல இருந்தேன்.. சட்டுனு தூக்கிய டோனி.. எல்லாமே போச்சு.. முன்னாள் வீரர் ஓபன் டாக்..!

இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி மனம் திறந்து பேசியுள்ளார். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன் அரங்கேறிய சம்பவத்தின் போது அப்போதைய இந்திய கேப்டன் எம்.எஸ். டோனி மற்றும் பி.சி.சி.ஐ. தேர்வுக்குழு மனோஜ் திவாரியை அணியில் இருந்து நீக்கியது.

2011 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் திவாரி சதம் அடித்த நிலையில், அடுத்த போட்டியிலேயே திவாரி அணியில் இருந்து நீக்கப்பட்டார். அதன்பிறகு கிட்டத்தட்ட எட்டு மாதங்கள் கழித்தே அவர் மீண்டும் இந்திய அணியில் விளையாடினார். சதம் அடித்தும் அடுத்த போட்டியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து திவாரி பல முறை ஏமாற்றம் குறித்து பேசியுள்ளார்.

அந்த வகையில், இந்த ஆண்டு துவக்கத்தில் பேசிய மனோஜ் திவாரி, “ஒருநாள் டோனியை சந்தித்து 12 ஆண்டுகளுக்கு முன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்றவர்கள் கூட ரன் குவிக்க சிரமப்பட்ட நிலையில் ஏன் என் மீது மட்டும் வெட்டு விழுந்தது என கேட்பேன்,” என்று தெரிவித்தார். அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து திவாரி மீண்டும் ஒருமுறை கருத்து தெரிவித்துள்ளார்.

“இது நீணட காலத்திற்கு முன் நடந்தது. இது கடந்த கால விஷயம் தான், ஆனால் இது வருத்தமாகவே உள்ளது. இதில் வருத்தமில்லை என்று கூறினால் நான் பொய் சொன்னதாகவே இருக்கும். என்ன செய்ய முடியும்? இதுதான் வாழ்க்கை, இதில் முன்னேறி செல்ல வேண்டியது அவசியம் ஆகும். ஒருவேளை எனது சுயசரிதையை எழுத வேண்டுமென்றாலோ அல்லது சொந்த பாட்காஸ்ட் செய்தாலோ, நான் எல்லாவற்றையும் கூறுவேன்.”

“ஆனால் அது எளிய விஷயம் இல்லை. ஒருவீரர் பீக் ஃபார்மில் இருக்கும் போது, அவரின் நம்பிக்கை நசுக்கப்பட்டால். அது அவரின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தி விடும்,” என்று மனோஜ் திவாரி தெரிவித்தார்.

Web Desk

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

2 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

2 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

2 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

2 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

2 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

2 weeks ago