Cricket
IPL 2025: ஐந்து ஸ்டார் பிளேயர்கள், ரிடென்ஷன் பிளான்கள் – இந்த விஷயம் தெரியுமா?
ஐ.பி.எல். 2025 தொடரில் தங்களது அணியில் வீரர்களை தக்க வைக்கும் பட்டியலை உருவாக்கும் பணிகளில் அணி நிர்வாகங்கள் ஈடுபட்டு வருகின்றன. அடுத்த மாதம் ஐ.பி.எல். மெகா ஏலம் நடைபெற உள்ள நிலையில், வீரர்கள் தக்க வைப்பது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய இன்னும் சில நாட்களே உள்ளன.
இதன் காரணமாக ஒவ்வொரு அணியில் எந்தெந்த வீரர்கள் தக்க வைக்கப்படுவர், எந்தெந்த வீரர்கள் ஏலத்திற்கு வருவார்கள் என்பது தொடர்பாக ஏராளமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், ஐந்து நட்சத்திர வீரர்கள் ஐ.பி.எல். 2025 ஏலத்திற்கு வரவிருப்பதாக கூறப்படுகிறது.
கே.எல். ராகுல்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இருந்து கேப்டன் கே.எல். ராகுல் விடுவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் எல்.எஸ்.ஜி. அணியை பிளே ஆஃப் வரை அழைத்து சென்ற கே.எல். ராகுல் கடந்த ஐ.பி.எல். தொடரில் இவ்வாறு செய்ய தவறினார்.
மயங்க் யாதவ்
எல்.எஸ்.ஜி. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற தவறிய நிலையிலும், மயங்க் யாதவ்-க்கு கடந்த சீசன் அற்புதமாக அமைந்தது. இதன் காரணமாக அவர் சமீபத்தில் இந்திய அணியில் இடம்பிடித்தார். எல்.எஸ்.ஜி. அணி மயங்க் யாதவை மிகப் பெரிய தொகை கொடுத்த தக்க வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ரிஷப் பண்ட்
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் தனது அணியை விட்டு விலகுவதை சமீபத்தில் சூசகமாக தெரிவித்தார். கடந்த 2016 ஆண்டு டெல்லி அணி மூலம் ஐ.பி.எல்.-இல் களமிறங்கிய பண்ட் அதே அணிக்காக விளையாடி வருகிறார். இது குறித்து வெளியான தகவல்களின் படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி அவரை விலைக்கு வாங்க விரும்புவதாக கூறப்படுகிறது.
எம்.எஸ். டோனி
அடுத்த ஆண்டு ஐ.பி.எல். தொடரில் எம்.எஸ். டோனி விளையாடுவது உறுதியாகாத நிலையில், எம்.எஸ். டோனி அடுத்த சீசனில் விளையாடுவது பற்றி பேசும் போது, அடுத்த சில ஆண்டுகளில் விளையாட தயாராக வைத்துக் கொள்வது சவால் நிறைந்த விஷயம் என்று கூறியிருந்தார். இது பற்றி சி.எஸ்.கே. நிர்வாகத்தினருடன் டோனி ஆலோசனை நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.
ரோகித் சர்மா
மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரரும், முன்னாள் கேப்டனுமான ரோகித் சர்மா அடுத்த சீசனில் அணியில் இருந்து விலகுவது பற்றி தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும், ரோகித் சர்மாவை அணியில் தக்க வைக்க மும்பை இந்தியன்ஸ் விரும்புவதாக கூறப்படுகிறது.