இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா டைமிங்கில் கொடுக்கும் பதில், அவரது ரியாக்ஷன் ரசிகர்கள் மத்தியில் எப்போதும் பாராட்டப்படும். சின்ன சின்ன விஷயங்களில் அவர் செய்யும் சேட்டைகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆவது வழக்கம் தான்.
முன்னதாக இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் போது, ரசிகர் ஒருவர் ஐபிஎல்-இல் எந்த அணிக்காக விளையாடுவீர்கள் என்ற கேள்விக்கு ரோகித் பதில் அளித்தார். அப்போது, கேள்வி கேட்ட ரசிகரிடம் உனக்கு நான் எந்த அணியில் விளையாட வேண்டும் என்று ரோகித் கேட்டார். இது தொடர்பான வீடியோ வைரல் ஆனது.
அந்த வரிதையில் மைதானத்தில் ரசிகை ஒருவருடன் ரோகித் மேற்கொண்ட குட்டி உரையாடல் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. வீடியோவின் படி ரோகித் சர்மா பயிற்சிக்கு பிறகு களத்தில் இருந்து ஸ்டான்ட்ஸ் வழியாக கடந்து செல்கிறார். அப்போது ரசிகை ஒருவர் ரோகித் சர்மாவிடம் தனக்கு கையொப்பம் போட்டுக்கொடுக்குமாறு கேட்டார். உடனே நின்ற கேப்டன் ரோகித், ரசிகை கொடுத்த கையேட்டில் தனது கையெழுத்தை போட்டார்.
ரோகித் கையொப்பம் இடும் நேரத்தில் ரசிகை அவரிடம், “விராட்-இடம் அவரது மிகப்பெரிய ரசிகை இங்கு வந்திருந்தார் என்று கூறுங்கள்” என தெரிவித்தார். இதை கேட்ட ரோகித், “நான் விராட்-இடம் கூறுகிறேன்” என்று பதில் அளித்தார். ரோகித் சர்மா ரசிகைக்கு கையொப்பம் இட்டது, அவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தது தொடர்பான வீடியோவை பலரும் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.
இதனிடையே இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது போட்டி நாளை (அக்டோபர் 24) பூனேவில் துவங்குகிறது. இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவியது. அந்த வகையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…