தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடும் இந்திய அணி நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. இந்த தொடரில் வைத்து ரமன்தீப் சிங் மற்றும் விஜய்குமார் வைசாக் இந்திய அணியில் அறிமுகமாகின்றனர். வங்கதேசம் அணிக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்த மயங்க் யாதவ் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் இடம்பெறவில்லை.
இந்திய அணி வீரர்கள் தொடர்பான அறிவிப்பில் மயங்க் யாதவ் மற்றும் ஷிவம் தூபே காயம் காரணமாக தேர்வில் கலந்து கொள்ளவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதேபோன்று ஆல்-ரவுண்டர் வீரரான ரியான் பராக் தேர்வில் கலந்து கொள்ளவில்லை.
இது குறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரியான் பராக் நீண்ட கால தோள்பட்டை பிரச்சினைக்காக தற்போது பிசிசிஐ-யின் எக்செல்லன்ஸ் சென்டரில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நான்கு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் வழிநடத்த உள்ளார். எனினும், இந்த தொடரில் இந்திய அணியின் துணை கேப்டனாக யாரும் அறிவிக்கப்படவில்லை.
நவம்பர் 8 ஆம் தேதி தொடங்கும் இந்த டி20 தொடர் நவம்பர் 14 ஆம் தேதி முடிவுக்கு வருகிறது. இந்த போட்டிகள் டர்பன், கென்பர்ஹா, சென்ச்சுரியன் மற்றும் ஜோகானஸ்பர்க் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் இடம்பெறவில்லை. மாறாக அவர் வரவிருக்கும் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இந்தியா ஏ அணியில் விளையாடுவார் என்று தெரிகிறது.
தென் ஆப்பிரிக்கா டி20 தொடருக்கான இந்திய அணி:
சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் ஷர்மா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், திலக் வர்மா, ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, அக்சர் பட்டேல், ரமன்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், விஜய்குமார் வைசாக், ஆவேஷ் கான், யாஷ் தயால்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…