பூனேவில் நடைபெற்ற இந்தியா – நியூசிலாந்து டெஸ்ட் போட்டிக்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே கருத்து தெரிவித்துள்ளார். டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்று அசத்தியுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இது நியூசிலாந்து அணி இந்திய மண்ணில் கைப்பற்றிய முதல் டெஸ்ட் தொடர் வெற்றி என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இழந்த இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்புகள் குறைய துவங்கியுள்ளது. தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த போதிலும், இந்திய அணியின் வெற்றி சதவீத புள்ளிகள் சரிந்துள்ளது.
இந்த நிலையில், இந்திய அணி தோல்வி மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி பேசிய அவர், “இது தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்-இன் அழகு என்று நினைக்கிறேன். இந்தியாவுக்கான சீரிஸ் நிறைவுபெற்று விட்ட போதிலும், அடுத்து வரும் போட்டிகள் அனைத்தும் மிக முக்கியமானதாக மாறியுள்ளது.”
“அவர்களே தங்கள் நிலைமையை கடினமாக மாற்றிக் கொண்டுள்ளனர். சீரிஸ் தொடங்கும் போது, சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற ஐந்து சுலபமான வெற்றிகள் தேவை என்ற நிலை பற்றி பேசினோம். ஆனால், தற்போது அடுத்த ஆறு போட்டிகளில் இந்திய அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது.”
“இது மிகவும் கடினமானது. அதுவும் நம்பிக்கை அதிகம் கொண்டுள்ள நியூசிலாந்து அணியை எதிர்கொண்ட வான்கடேவில் ஒரு போட்டியும், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஐந்து போட்டிகளும் உள்ளன,” என்று தெரிவித்தார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…