இந்தியாவுக்கு எதிராக பூனேவில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் இந்திய அணி 12 ஆண்டுகளுக்கு பின் உள்நாட்டில் டெஸ்ட் தொடரில் இழந்துள்ளது. இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் டெவான் கான்வே 76 ரன்களையும், மிட்செல் சான்ட்னெர் 33 ரன்களையும் அடித்தனர். இந்தியா சார்பில் சிறப்பாக பந்துவீசிய வாஷிங்டன் சுந்தர் 7 விக்கெட்டுகளையும், ரவிச்சந்திரன் அஷ்வின் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இதைத் தொடர்ந்து முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 156 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆனது. இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 38 ரன்களையும், யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் தலா 30 ரன்களையும் அடித்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து சார்பில் சான்ட்னெர் 7 விக்கெட்டுகளையும், பிலிப்ஸ் 2 விக்கெட்டுகளையும், டிம் சௌதி 1 விக்கெட் வீழ்த்தினர்.
முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி 255 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் அந்த அணி 358 ரன்கள் முன்னிலை பெற்றது. இதனால் 359 ரன்கள் எனும் இமாலய இலக்கை துரத்தியது. இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 77 ரன்களை அடித்தார்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இடையில் இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஷ்வின், ஜடேஜாவுடன் சேர்ந்து போராடினார். எனினும், இவர் 18 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். கடைசி வரை களத்தில் இருந்த ரவீந்திர ஜடேஜா 42 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார். நியூசிலாந்து சார்பில் மிட்செல் சான்ட்னெர் 6 விக்கெட்டுகளையும், அஜாஸ் பட்டேல் 2 விக்கெட்டுகளையும், பிலிப்ஸ் 1 விக்கெட் வீழ்த்தினர்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…