கடந்த சில வாரங்களுக்கு முன் சாத்தியமற்றதாக கூறப்பட்ட விஷயம் தற்போது நடந்திருக்கிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி இன்னும் ஒரு டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தால், சொந்த மண்ணில் இந்திய அணி ஒயிட்வாஷ் செய்யப்பட்டு விடும். 18 ஆண்டுகளுக்கு பின் இந்திய மண்ணில் இந்திய அணி ஒயிட்வாஷ் செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி விடும்.
அதேபோன்று இந்திய மண்ணில் நியூசிலாந்து அணி முதல் முறையாக டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இந்த தொடரின் இறுதிப் போட்டி மும்பையின் பிரபல வான்கடே மைதானத்தில் நவம்பர் 1 ஆம் தேதி தொடங்குகிறது. இந்த நிலையில், இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற நியூசிலாந்து அணிக்கு சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுபற்றிய எக்ஸ் தள பதிவில், “இங்கு வரும் எந்த அணிக்கும், இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும் என்பது கனவாக இருக்கும், நியூசிலாந்து அதனை நனவாக்கிக் கொள்ள சிறப்பாக விளையாடி இருக்கிறது. இதுபோன்ற முடிவுகள் சிறப்பான, ஆல்-ரவுண்ட் அணியின் முயற்சியால் மட்டுமே சாத்தியமாகும்.”
“13 விக்கெட்டுகளை கைப்பற்றி சிறப்பாக ஆடி தனி ஆளாக நிற்கும் சான்ட்னெரை குறிப்பிட வேண்டும். அசாத்திய இலக்கை எட்டிய நியூசிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…