ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் இம்மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மெகா ஏலத்தை ஒட்டி ஐபிஎல் அணிகள் தங்களது அணியில் தக்க வைக்க விரும்பும் வீரர்கள் பட்டியலை இறுதி செய்து விட்டன. இது தொடர்பான அறிவிப்புகள் நேற்றே வெளியாகிவிட்டன.
இந்த நிலையில், ஐபிஎல் 2025 தொடருக்காக அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள், விடுவிக்கப்பட்ட வீரர்கள் சார்ந்த விவகாரங்களில் அதிகம் பேசு பொருளானா டாப் 10 சம்பவங்களை தொடர்ந்து பார்ப்போம்..,
மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட்:
டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தனது கேப்டன் ரிஷப் பண்ட்-ஐ அணியில் இருந்து விடுவித்தது. இதனால் ரிஷப் பண்ட் மெகா ஏலத்திற்கு வருகிறார்.
அதிக கேப்டன்கள் நீக்கம்:
ஐபிஎல் ஏல வரலாற்றில் முதல் முறையாக அதிக கேப்டன்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஷிகர் தவான், ஃபாப் டூ பிளெசிஸ், கே.எல். ராகுல், ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
டிராவிட் வருகை- ராஜஸ்தானில் இந்திய ஆதிக்கம்:
நீண்ட காலம் கழித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இணைந்துள்ளார். இவர் வருகையை தொடர்ந்து ராஜஸ்தான் அணியில் ஆறு இந்திய வீரர்கள் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.
மும்பையில் பும்ராவுக்கு ஜாக்பாட்:
மும்பை இந்தியன்ஸ் அணி ஜஸ்பிரித் பும்ராவுக்கு ரூ. 18 கோடி கொடுத்து அணியில் தக்க வைத்துக் கொள்கிறது. இவரைத் தவிர கேப்டன் ஹர்திக் பாண்டியா, ரோகித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் ரூ. 16 கோடி தொகையில் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
விராட் கோலியை நம்பும் ஆர்சிபி:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் விராட் கோலி தக்கவைக்கப்படுகிறார். ரூ. 21 கோடிக்கு விராட் கோலி தக்கவைக்கப்பட்டுள்ளார். இவர் தவிர ராஜத் பட்டிதார், யாஷ் தயால் ஆகியோரும் தக்க வைக்கப்படுகின்றனர்.
அன்கேப்டு வீரர் ஆனார் எம்எஸ் டோனி:
ஐபிஎல் தொடரில் மீண்டும் அமலுக்கு கொண்டுவரப்பட்டுள்ள அன்கேப்டு வீரர் பதவி மூலம், எம்.எஸ். டோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அடுத்த சீசனிலும் விளையாடுகிறார். பலரும் இவருக்காகவே அன்கேப்டு வீரர் விதிமுறை மீண்டும் கொண்டுவரப்பட்டதாக கருத்து தெரிவித்தனர்.
மயங்க் யாதவ்-க்கு ஜாக்பாட்:
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் மயங்க் யாதவ் ரூ. 11 கோடி தொகைக்கு தக்கவைக்கப்படுகிறார். கடந்த சீசனில் காயம் காரணமாக அவதிப்பட்ட அதிவேக பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் அடுத்த சீசனில் எல்.எஸ்.ஜி.-யின் பந்துவீச்சை பலப்படுத்த இருக்கிறார்.
கேகேஆர்-இல் ரிங்கு சிங் ஆதிக்கம்:
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் நட்சத்திர வீரர்களான ஆன்ட்ரே ரசல், சுனில் நரைன் ஆகியோரை கடந்த ரிங்கு சிங் அதிக தொகைக்கு அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளார்.
எஸ்ஆர்எச்-இல் வெளிநாட்டவர் ஆதிக்கம்:
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியில் சர்வதேச வீரர்கள் அதிகளவில் தக்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஹென்ரிச் கிளாசன், பேட் கம்மின்ஸ் மற்றும் டிராவிஸ் ஹெட் ஆகியோரை தங்களது அணியில் தக்க வைத்துள்ளனர்.
பஞ்சாப் கிங்ஸ்-இல் எல்லாமே புதுசு:
பஞ்சாப் கிங்ஸ் அணியில் சஷாங்க் சிங் மற்றும் பிரப்சிம்ரன் ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர். மற்ற வீரர்களை விடுவிக்கும் பஞ்சாப் அணி மெகா ஏலத்தில் வலுவான அணியை உருவாக்க முடிவு செய்துள்ளது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…