திருப்பி சொல்லுங்க.. பாக். ரிப்போர்டர் கேள்விக்கு பென் ஸ்டோக்ஸ் ரியாக்ஷன்

பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராவல்பிண்டியில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் முதல் நாள் ஆட்டத்திற்கு பென் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார்.

செய்தியாளர் சந்திப்பின் போது பாகிஸ்தான் செய்தியாளர் ஆங்கிலத்தில் கேட்ட கேள்வி புரியாமல் பென் ஸ்டோக்ஸ் குழப்பம் அடைந்தார். கேள்வி புரியாத பென் ஸ்டோக்ஸ் செய்தியாளரை உற்று நோக்கினார். பிறகு, இன்னொரு முறை கேளுங்கள் என்றார். பாகிஸ்தானை சேர்ந்த செய்தியாளர் மீண்டும் தனது கேள்வியை எழுப்பினார்.

இரண்டாவது முறையும் கேள்வி புரியாத பென் ஸ்டோக்ஸ், அவரிடம் மன்னித்துக் கொள்ளுங்கள் மீண்டும் கேளுங்கள் என்றார். பிறகு செய்தியாளர் தனது கேள்வியை கேட்க பென் ஸ்டோக்ஸ் அதற்கு பதில் அளித்தார். கேள்வி புரியாமல் பென் ஸ்டோக்ஸ் கொடுத்த ரியாக்ஷன் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

இந்த சம்பவத்தின் போது பாகிஸ்தான் செய்தியாளர் பென் ஸ்டோக்ஸ்-இடம், இங்கிலாந்து அணியால் முதல் டெஸ்ட் போட்டியில் அடித்த 823 போன்ற இமாலய இலக்கை அடிக்க முடியுமா என்று கேட்டார். எனினும், இவர் பயன்படுத்திய ஆங்கில வார்த்தைகள் மற்றும் உச்சரிப்பு பென் ஸ்டோக்ஸ்-ஐ குழப்பத்தில் ஆழ்த்தியது.

சிறு முயற்சிக்கு பின் கேள்வியை ஓரளவுக்கு புரிந்து கொண்டதாக காணப்பட்ட பென் ஸ்டோக்ஸ் செய்தியாளருக்கு பதில் அளித்தார். அப்போது, “அது அருமையாக இருக்கும்,” என்று கூறினார்.

போட்டியை பொருத்தவரை இங்கிலாந்து அணி டாஸ் வென்று முதலில் பேட் செய்தது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 267 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன நிலையில், பாகிஸ்தான் அணி தற்போது முதல் இன்னிங்ஸில் ஆடி வருகிறது. இரண்டாம் நாளின் முதல் செஷன் வரை பாகிஸ்தான் அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து 99 ரன்களை அடித்துள்ளது.

Web Desk

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

2 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

2 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

2 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

2 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

2 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

2 weeks ago