இங்கிலாந்து அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி கைப்பற்றி அசத்தியது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாக்ஸிதான் அணி இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றதோடு, தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
ராவல்பிண்டியில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சஜித் கான் மற்றும் நோமன் அலி இணைந்து இங்கிலாந்து பேட்டர்களை அவுட் செய்து பாகிஸ்தான் வெற்றிக்கு மிக முக்கிய பங்காற்றினர்.
இந்த போட்டிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த பாகிஸ்தான் அணியின் அனுபவம் மிக்க சுழற்பந்து வீச்சாளர் சஜித் கான் கேள்வி ஒன்றுக்க அளித்த பதில் அனைவரையும் சிரிக்க செய்தது.
போட்டியின் போது இங்கிலாந்து அணி பேட்டர்களை சஜித் கான் அச்சமூட்டியது பற்றி செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சஜித் கான், “நான் யாரையும் பயமுறுத்தவில்லை, ஆனால் எல்லாரும் இதைத் தான் சொல்கின்றனர். கடவுள் (அல்லாஹ்) எனக்கு இந்த தோற்றத்தை கொடுத்துவிட்டார், நான் சிரித்தால் கூட மக்கள் அச்சமடைகின்றனர்,” என்று தெரிவித்தார்.
இக்கட்டான சூழலில், பேட்டிங்கின் டெயில் என்ட்-இல் அணிக்கு தேவையான ரன்களை அடித்ததோடு, சஜித் கான் மற்றும் நோமன் அலி ஜோடி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் கூட்டாக சேர்ந்து 39 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியது. இவை நான்கு முயற்சிகளுக்கு பின் பாகிஸ்தான் அணி தொடரை கைப்பற்ற மிக முக்கிய காரணமாக அமைந்தது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…