பாகிஸ்தான் அணி வீரர்கள் உடனான முரண்பாடு காரணமாக அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் கேரி கிர்ஸ்டென் தனது பதவியை ராஜினாமா செய்வதாக தகவல்கள் வெளியாகின. இது தொடர்பாக பல்வேறு காரணங்கள் கூறப்பட்ட நிலையில், கேரி கிர்ஸ்டென் வெளியேறுவதற்கான காரணம் இதுதான் என்று பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பசித் அலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், “முகமது ரிஸ்வான் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட போது தான், இந்த பிரச்சினை துவங்கியது. கிர்ஸ்டென் வேறொரு வீரரை, பாகிஸ்தான் கேப்டனாக நியமிக்க பரிந்துரை செய்திருந்தார். அவர் தனக்கு முழு அதிகாரம் இருப்பதாக நினைத்தார். ஆனால் எங்கள் நாட்டில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் ஒரே இரவில் எல்லாவற்றையும் மாற்ற முடியும் என்பதை அவர் நினைத்திருக்கவில்லை,” என்று தெரிவித்தார்.
பாபர் அசாமை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக் கிழமை பாகிஸ்தான் அணியின் கேப்டனாக முகமது ரிஸ்வான் அறிவிக்கப்பட்டார். அந்த வகையில் ஆஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் அணியை ரிஸ்வான் வழிநடத்த உள்ளார். அனுபவம் மிக்க விக்கெட் கீப்பரான ரிஸ்வானுடன் சலாம் அலி பாகிஸ்தான் அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
முகமது ரிஸ்வான் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்ட 24 மணி நேரத்திற்குள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், கேரி கிர்ஸ்டென் ராஜினாமா செய்ததை உறுதிப்படுத்தி விட்டது. பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, பாகிஸ்தான் அணி ஒற்றை ஒருநாள் போட்டியில் கூட விளையாடாத நிலையில், கேரி கிர்ஸ்டென் தனது பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…