இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக தெரிவித்து இருக்கிறார். முன்னதாக எம்.எஸ். டோனியை டெல்லியில் வைத்து சந்தித்த சுரேஷ் ரெய்னா தற்போது இது பற்றி கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
சில நாட்களுக்கு முன்பு தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் எந்தெந்த வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர் என்பதை அறிவித்தது. அதன்படி அனைவரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் எம்.எஸ். டோனி அன்கேப்டு வீரராக தக்க வைக்கப்பட்டார்.
இவருக்கான தொகை ரூ. 4 கோடி ஆகும். கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் விளையாடி வந்த ரிஷப் பண்ட் ஐபிஎல் 2025 தொடருக்கான அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அதன்படி ரிஷப் பண்ட் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வேறொரு அணிக்காக விளையாட இருக்கிறார்.
ஜியோசினிமாவில் பேசிய சுரேஷ் ரெய்னா, “நான் சமீபத்தில் டெல்லியில் வைத்து எம்.எஸ். டோனியை பார்த்தேன். பண்ட் அங்கு இருந்தார். எனக்கு பெரிதாக ஏதோ நடக்க இருப்பதாக தோன்றுகிறது. விரைவில் யாரோ ஒருவர் மஞ்சள் நிற ஜெர்சி அணிய உள்ளார்,” என்று தெரிவித்தார்.
முன்னதாக இணையத்தில் வெளியான பல்வேறு தகவல்களில் ரிஷப் பண்ட் சிஎஸ்கே அணியில் இணைய இருப்பதாக கூறப்பட்டது. அந்த வகையில், ரிஷப் பண்ட் சிஎஸ்கே அணியில் இணைவது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தாது. மாறாக சிஎஸ்கே அணிக்கு வலு சேர்க்கும் முடிவாகவே பார்க்கப்படும். தற்போது 43 வயதான டோனி எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெறுவார் என்ற நிலை உள்ளது.
அந்த வகையில், சிஎஸ்கே அணிக்கு அடுத்த விக்கெட் கீப்பர், பேட்டர் என்ற பணியை தாண்டி அடுத்தடுத்த ஆண்டுகள் அந்த அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்கும் பட்சத்தில் சிஎஸ்கேவின் பரீ்ட்சய முகமாகவும் ரிஷப் பண்ட் உருவெடுக்கலாம் என்று தெரிகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…
டெஸ்ட் தொடரை நியூஸிலாந்து வென்று விட்டது, இருந்த போதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியிலாவது வெற்றி பெற்று தனது…