முதல் இன்னிங்ஸ் பந்துவீச்சு, பேட்டிங்கில் மிரட்டிய நியூசிலாந்து அணியை, இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி கவனமாக கையாண்டு வருகிறது. இந்திய அணியின் துவக்க வீரர்கள் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்த, அடுத்து வந்தவர்கள் நிலைத்து நின்று ரன் குவிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், இந்திய அணியின் சர்ஃப்ராஸ் கான் நியூசிலாந்து பந்துவீச்சை எதிர்கொண்ட சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். துவக்கம் முதலே நிதானமாக ஆடிய சர்ஃப்ராஸ் கான் நான்காம் நாள் ஆட்டத்தில் தனது சதத்தை பதிவு செய்தார். நான்காம் நாளில் மழை குறுக்கிடும் வரை சர்ஃப்ராஸ் கான் 125 ரன்களை அடித்திருந்தார். சர்ஃப்ராஸ் கான் மற்றும் ரிஷப் பண்ட் ஜோடி இணைந்து மழைக்கு முன்பு வரை 22 ஓவர்களில் 113 ரன்களை குவித்தனர்.
முதல் இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆன சர்ஃப்ராஸ் கான், இரண்டாவது இன்னிங்ஸில் சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம் அவர் டக் அவுட் ஆன போட்டியிலேயே, மீண்டும் சதம் அடித்த இந்திய பேட்டர்களின் எலைட் லிஸ்டில் இடம்பிடித்துள்ளார்.
டக் அவுட் ஆன போட்டியில் சதம் அடித்த இந்திய வீரர்கள் பட்டியல்:
மாதவ் ஆப்தே 0 மற்றும் 163
சுனில் கவாஸ்கர் 0 மற்றும் 118
திலீப் வெங்சர்கார் 0 மற்றும் 103
முகமது அசாருதீன் 0 மற்றும் 109
சச்சின் டெண்டுல்கர் 0 மற்றும் 136
ஷிகர் தவான் 0 மற்றும் 114
விராட் கோலி 0 மற்றும் 104
சுப்மன் கில் 0 மற்றும் 119
சர்ஃப்ராஸ் கான் 0 மற்றும் 125*
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…