இந்திய அணிக்கு எதிராக 36 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவில் டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற ரச்சின் ரவீந்திராவின் அமைதியான போக்கு முக்கிய காரணியாக இருந்தது என நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லேதம் தெரிவித்தார்.
“எங்கள் பக்கம் இளம் வீரர்கள் இருந்தது நல்வாய்ப்பாக அமைந்தது. சில இளம் வீரர்கள் இந்தப் போட்டியில் நிரூபித்துக் காட்டியுள்ளனர். வில் ரூர்கி பந்துவீசிய விதம் அபாரமாக இருந்தது. டிம் சௌதி மற்றும் மேட் ஹென்றியின் பந்துவீச்சும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை எதிரணிக்கு ஏற்படுத்தினர். முதல் இன்னிங்ஸில் மேட்-க்கு நல்ல புகழாரம் கிடைத்தது.”
“எல்லாமும் சரியாக அமைந்துவிட்டது. இந்த நிலையில் இருப்பது மிகவும் விசேஷமான உணர்வு. இரு இன்னிங்ஸிலும் நாங்கள் சிறப்பாக பணியாறஅறி இருப்பதாக நினைக்கிறோம். இந்த பெருமை மிக்க தருணத்தை கொண்டாட விரும்புகிறோம்.”
“ரச்சின் ரவீந்திரா விளையாடிய விதம் எங்களுக்கு மிக முக்கியமானதாக அமைந்தது. 9வது விக்கெட்டுக்கு 137 ரன் பார்ட்னர்ஷிப் சேர்ப்பது எளிய விஷயம் கிடையாது. அவர் முன்னிலையில் இருந்து புதிய பந்தை எதிர்கொண்டு விளையாடியது முக்கியமான ஒன்றாகும்.”
“இன்று காலையில் அவர் களமிறங்கி விளையாடிய விதம் கச்சிதமாக இருந்தது. அவரது நிதான ஆட்டம் டிரெசிங் ரூமை அமைதியாக வைத்திருந்தது. கடந்த 12 மாதங்களில் அவரின் திறமையை நாங்கள் பார்த்திருக்கிறோம். அவர் எங்கள் பக்கம் நிற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது,” என்று டாம் லேதம் தெரிவித்தார்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…