கடைசி பந்தில் கோலி அவுட்.. கடுப்பான ரோகித், என்ன செய்தார் தெரியுமா?

முதல் நாள் மழையால் பறிபோன ஆட்டம், இரண்டாம் நாள் நியூசிலாந்து அபாரம் என முதல் டெஸ்ட் பரபர சூழலை உருவாக்க தவறவில்லை. முதல் இன்னிங்ஸில் 46 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன இந்திய அணி, பந்துவீச்சிலும் சொதப்பியது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 402 ரன்களை குவித்தது.

இதைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இந்திய அணியின் துவக்க வீரர்களான ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா முறையே 35 மற்றம் 52 ரன்களை அடித்தனர். அடுத்து வந்த இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 52 ரன்கள் அடித்தார்.

துவக்கத்தில் நிதானமாக ஆடிய விராட் கோலி, நேரம் ஆக தனது ஃபார்ம் மற்றும் அனுபவத்தை வெளிப்படுத்தும் ஷாட்களை அடித்து, ரன் குவிப்பில் ஈடுபட்டார். பந்துவீச்சாளர்களுக்கு சவாலாக விளங்கிய விராட் கோலி, மூன்றாம் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தை எதிர்கொண்ட போது, அவுட் ஆகி ரசிகர்கள் மற்றும் இந்திய டிரெசிங் ரூமை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

போட்டியில் மூன்றாம் நாளின் கடைசி ஓவரை கிளென் பிலிப்ஸ் வீசினார். முதல் பந்தை எதிர்கொண்ட சர்ஃபராஸ் கான் ஒரு ரன் எடுக்க, கோலி இரண்டாவது பந்தை எதிர்கொண்டார். இந்த ஓவரில் இரண்டு பந்துகளில் ரன் அடிக்காத விராட் கோலி, நான்காவது பந்தில் 2 ரன்களை எடுத்தார். ஐந்தாவது பந்தில் ரன் எடுக்காத கோலி, ஓவரின் கடைசி பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.

மூன்றாம் நாள் ஆட்டத்தின் கடைசி பந்தில் விராட் கோலி அவுட் ஆனது ரசிகர்களை அமைதியாக்கியது. மேலும், பெவிலியனில் இருந்த இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மாவை கடுமையாக அப்செட் ஆக்கியது. விரக்தியின் உச்சத்திற்கு சென்ற ரோகித் சர்மா முகம் மாறிப் போனது. ரோகித் சர்மாவின் இந்த ரியாக்ஷன் அடங்கிய புகைப்படம் மற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Web Desk

Recent Posts

5 ஓவரில் 120 ரன்கள்.. இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த பாகிஸ்தான் – இது எப்ப நடந்தது?

ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…

3 weeks ago

விஷயம் டாப் சீக்ரெட், ரகசிய மீட்டிங்.. CSK-ல் ரிஷப் பண்ட்.. முன்னாள் வீரர் ஓபன் டாக்!

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…

3 weeks ago

நான் இருக்கேன்…மீண்டும் நிரூபித்துள்ள ரவீந்திர ஜடேஜா…

இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…

3 weeks ago

குப்பைகளுக்கு குட்-பை சொன்ன சென்னை மாநகராட்சி…ஒரே நாள்ல இவ்ளோவா?…

பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…

3 weeks ago

நழுவ நினைத்த நாகேஷ்…கெளரவப்படுதிய எம்.ஜி.ஆர்…நடந்தது என்ன தெரியுமா?…

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…

3 weeks ago

சாம்பியன் தான் இருந்தாலும் இவங்க மட்டும் போதும்…கோல்கத்தா அணி எடுத்த முடிவு…

ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…

3 weeks ago