நியூசிலாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்தது. டாஸ் முடிவில் துவங்கி இந்திய அணி எடுத்த பல்வேறு முடிவுகள் நியூசிலாந்து வெற்றி பெற ஏதுவாக அமைந்துவிட்டது. கடைசி நாள் ஆட்டத்தில் வெறும் 107 ரன்களை இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
அந்த அணியின் வில் யங், ரச்சின் ரவீந்திரா ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் முறையே 48 மற்றும் 39 ரன்களை எடுத்தது அந்த அணி சுலபமாக வெற்றி பெற காரணமாக அமைந்தது. இந்த வெற்றி மூலம் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இது ஒருபுறம் இருக்க இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சற்றே வித்தியாசமான தோற்றத்தில் பூனேவுக்கு விமானத்தில் புறப்பட்டார். இதற்காக முகமூடி அணிந்து கொண்டு பெங்களூரு விமான நிலையம் வந்த விராட் கோலி, யார் கண்ணிலும் சிக்காமல் பூனே செல்ல திட்டமிட்டிருந்தார்.
எனினும், விராட் கோலி விமான நிலையத்தில் வரிசையில் அமைதியாக நின்று கொண்டிருக்கும் காட்சிகள் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. மேலும், மும்பை சென்ற விராட் கோலி தன் மனைவி அனுஷ்கா ஷர்மாவுடன் அமெரிக்க பாடகர் கிருஷ்ணா தாஸின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. வீடியோக்களில் அனுஷ்கா ஷர்மா கைத்தட்டி நிகழ்ச்சியை கண்டுகளிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
நியூசிலாந்துக்கு எதிரான போட்டியை பொருத்தவரை விராட் கோலி முதல் இன்னிங்ஸில் ஒன்பது பந்துகளை எதிர்கொண்டு ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். இரண்டாவது இன்னிங்ஸில் விராட் கோலி 102 பந்துகளை எதிர்கொண்டு 70 ரன்களை குவித்தார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இந்திய ஸ்குவாடில் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் காயம் காரணமாக அவதியுற்று வந்த ரிஷப் பண்ட் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாகி இருக்கும் நிலையில், வாஷிங்டன் சுந்தர் ஸ்குவாடில் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…