இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் இரு அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முன்னிலை பெற்றுள்ளது.
இந்திய டெஸ்ட் அணி கேப்டனாக பொறுப்பேற்ற முதல் போட்டியில் சுப்மன் கில் தோல்வி தழுவியதை அடுத்து அவர் மீது முன்னாள் வீரர்கள் பலரும் மாறுப்பட்ட விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். பேட்டிங்கில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், இங்கிலாந்தது அணி 371 எனும் இமாலய இலக்கை துரத்திய போது 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி குறித்து முன்னாள் இந்திய வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், “பலரும் சுப்மன் கில் தீவிரமான தடுப்பாட்டத்தில் ஈடுபட்டதாக உணர்ந்தனர். ஆனால் அவர் இங்கிலாந்து அணிக்கு பவுண்டரிகளை தடுத்து, விக்கெட்டுகளை கைப்பற்ற அவர் நினைத்திருப்பார் என்றே நினைக்கிறேன். இங்கு இளம் கேப்டன் சுப்மன் கில்லுடன் விராட் கோலியை ஒப்பிடுவதை நான் வெறுக்கிறேன். ஆனால், விராட் இந்தளவுக்கு தடுப்பாட்டத்திற்கான ஃபீல்டிங் செட் செய்திருக்க மாட்டார்.”
“விராட் கோலி போன்ற ஒருத்தர்- நம்மிடம் போதுமான ரன்கள் இருக்கின்றன, நான் அவர்களை தேநீர் இடைவெளுக்கு முன் ஆல்-அவுட் செய்வேன் என்றே கூறியிருப்பார். அவர் இதில் விக்கெட்டுகளை கைப்பற்றி இருப்பாரா என்பது தெரியாது, ஆனால் அவர் நிச்சயம் தாக்குதலுக்கு ஏற்ற வகையிலான ஃபீல்டிங் செட் செய்திருப்பார்,” என்று தெரிவித்தார்.
இதை கூறிய மஞ்ரேக்கர் மற்றொரு விஷயத்தையும் ஒப்புக் கொண்டுள்ளார். விராட் கோலியிடம் ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா போன்ற பந்துவீச்சாளர்கள் தற்போதைய கேப்டன் சுப்மன் கில்லுக்கு வழங்கப்படவில்லை என்பதையும் அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அவர் சுப்மன் கில்-ஐ அதிகம் வசைபாட விரும்பவில்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தி இருந்தார்.
ஆப்பிள் நிறுவனம் தனது ஏஐ ஆன siri-க்குப் புதிய வடிவம் கொடுக்க கூகுளின் Gemini உதவியை நாட இருப்பதாகத் தகவல்கள்…
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்டரான ஷான் வில்லியம்ஸ், தன் போதை பழக்கத்துக்கு அடிமையானதாக ஒப்புக்கொண்டிருக்கிறார். Sean Williams ஜிம்பாப்வே…
OpenAI நிறுவனம் தனது ஏஐ வீடியோ ஜெனரேட்டிங் செயலியான Sora செயலியை ஆண்ட்ராய்டு பயனாளர்களுக்கும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. OpenAI Sora செயற்கை…
ஐபோன் பயனாளர்கள் முன்னெப்போதும் கேட்டிராத அளவுக்கு iPhone 16 Plus-ல் மிகப்பெரிய விலைக் குறைப்பு ஆஃபரை ஜியோ மார்ட் கொடுக்கிறது.…
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் Computer Emergency Response Team, அதாவது CERT-In, கூகுள்…
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, தனது ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பாகுபலி என்று பெயரிடப்பட்ட 4,410 கிலோ…