Connect with us

Cricket

இது நடந்தா போதும்- WTC ஃபைனலில் இந்தியா

Published

on

இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திடம் டெஸ்ட் தொடரில் தோல்வியை தழுவியது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதுதவிர உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் இந்திய அணி சில புள்ளிகளை இழக்க செய்துள்ளது. இதனால், இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு சரிந்துள்ளது.

நியூசிலாந்து அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகளில் தோல்வி, டெஸ்ட் தொடரை இழந்தது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது. டெஸ்ட் தொடரை இழந்துள்ள போதிலும், இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்திலேயே உள்ளது.

62.82 சதவீத புள்ளிகளை கொண்டுள்ள இந்திய அணி தற்போது புள்ளிகள் பட்டியலில் முன்னணி வகிக்கிறது. எனினும், நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடங்கும் முன் இந்திய அணி 68.06 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருந்தது.

இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியா அணி 62.50 புள்ளிகளுடன் மிக நெருக்கமாக இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த பட்டியலில் இலங்கை அணி 55.56 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், நியூசிலாந்து அணி 50 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளது.

தென் ஆப்பிரிக்கா அணி 47.62 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளது. இந்த புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ள அணிகளே இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்,

அந்த வகையில் இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான மீதமுள்ள ஒரு டெஸ்ட் போட்டி, ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் என மொத்தத்தில் ஆறு டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இந்த ஆறு போட்டிகளில் இந்திய அணி நான்கு போட்டிகளில் வெற்றி பெற்றால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியும்.

இதில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்படும் பட்சத்தில் மற்ற அணிகள் பெறும் முடிவுகள் அடிப்படையில் தான் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற முடியுமா என்று பார்க்க வேண்டும்.

google news