தமிழ்நாடு பாஜகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சி மோதல் குறித்து அக்கட்சியின் மேலிடம் அறிக்கை கேட்டிருப்பதால், அண்ணாமலையின் மாநிலத் தலைவர் பதவி தப்புமா என்ற விவாதம் எழுந்திருக்கிறது.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவுடன் கூட்டணியில் இருந்தது பாஜக. ஆனால், அதிமுக தலைவர்கள் குறித்து பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறிய சில கருத்துக்களால் இரு கட்சித் தலைவர்கள் இடையே வார்த்தைப் போர் முற்றி, மக்களவைத் தேர்தலுக்கு முன்பாகக் கூட்டணியும் முறிந்தது. இதையடுத்து பாமக உள்ளிட்ட கட்சிகளோடு கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்க்கொண்ட பாஜகவால் தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட வெற்றிபெற முடியவில்லை.
தேர்தலுக்கு முன்பாகவே இதுகுறித்து கட்சி மேலிடத்துக்கு அறிக்கை கொடுத்திருந்த நிர்மலா சீதாராமன், `அதிமுக உடனான கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம்’ என்று சுட்டிக்காட்டியிருந்ததார். தேர்தல் தோல்விக்குப் பின்னர், அண்ணாமலையை வெளிப்படையாகவே விமர்சித்திருந்தார் தமிழிசை சவுந்தரராஜன். அவர், `தேர்தலில் பாஜக தோல்விக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை எடுத்த தவறான முடிவு தான் காரணம். அதிமுகவுடன் கூட்டணி அமைத்திருந்தால் 20 இடங்களிலாவது வெற்றி பெற்று இருக்கலாம்’ என்று கூறியது அண்ணாமலை ஆதரவாளர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து அண்ணாமலைக்கு ஆதரவாக அக்கட்சியின் ஐடி விங் நிர்வாகிகள் சிலர் தமிழிசையைக் கடுமையாக விமர்சனம் செய்தனர். இதற்கும் தமிழிசை தரப்பில் கடும் எதிர்வினையாற்றப்பட்டது. இந்தநிலையில், இவர்கள் இருவர் இடையிலான மோதல் உட்கட்சி மோதலாக வெடித்தது. இந்த சூழலில், தமிழ்நாட்டில் கட்சியின் முழுக் கட்டுப்பாட்டைத் தனக்கு அளித்தால் 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களில் வெல்ல முடியும் என்று அண்ணாமலை கட்சி மேலிடத்தில் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், உட்கட்சி மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதுகுறித்து பாஜக நிலைக்குழு உறுப்பினர்களான பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் வானதி சீனிவாசன் ஆகியோரிடம் மேலிடப் பொறுப்பாளரான பியூஷ் கோயல் அறிக்கை கேட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இவர்களின் அறிக்கையைப் பொறுத்து அண்ணாமலை மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து பாஜக மேலிடம் முடிவெடுக்கும் எனத் தெரிகிறது. இதனால், அண்ணாமலையின் பதவி தப்புமா என்ற விவாதம் தமிழ்நாடு அரசியல் களத்தில் பரபரப்பைப் பற்ற வைத்திருக்கிறது.
இதையும் படிங்க: நடிகைக்கு ஆபாச வீடியோ!.. கண்ட துண்டமாக வெட்டி நாய்க்கு போட்ட நடிகர் தர்ஷன்.. பரபர அப்டேட்!..
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…