Connect with us

tamilnadu

கள்ளக்குறிச்சியில் 4 பேர் மரணத்துக்கு என்ன காரணம்…. கலெக்டர் விளக்கம்

Published

on

கள்ளக்குறிச்சியில் மூன்று பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக தவறான தகவல் பரப்பப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஷெகாவத் விளக்கமளித்திருக்கிறார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தைச் சேர்ந்த சுரேஷ், பிரவீன் மற்றும் சேகர் ஆகியோர் மரணமடைந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பேசிய அவர்களின் குடும்பத்தினர், கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாரயம் விற்பனை செய்யப்பட்டதாகவும், அதை குடித்ததாலேயே அவர்கள் உயிரிழந்ததாகவும் பகிரங்கமாகக் குற்றம்சாட்டினர்.

இதுவே கடைசியாக இருக்கட்டும். இந்த விவகாரத்தில் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் விட்டனர். போலீஸுக்கு மாமுல் கொடுத்துவிட்டு கள்ளக்குறிச்சி கல்வராயன் மலையில் கள்ளச்சாரய ஊறல் போடுவதுண்டு என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்துவருகிறது.

இந்தநிலையில், கருணாபுரத்தில் நிகழ்ந்த மரணங்கள் கள்ளச்சாராயத்தால் நிகழ்ந்தவையே என்று பரவிய தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதுகுறித்து விளக்கமளித்துள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஷெகாவத் கள்ளச்சாரய மரணங்கள் என்று தவறான தகவல் பரப்பப்படுவதாகக் கூறியிருக்கிறார். கள்ளச்சாரய மரணங்கள் என்பதை போலீஸும் மருத்துவர்களும் உறுதிப்படுத்தவில்லை என்றும் அவர் விளக்கமளித்திருக்கிறார்.

google news
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

latest news

கள்ளக்குறிச்சி பிரச்னையில் வெளியான திடுக்கிடும் அதிர்ச்சி… கள்ளச்சாராய தலைவன் 19வயது இளைஞனா?

Published

on

By

கள்ளக்குறிச்சி பிரச்னையில் சிபிசிஐடி விசாரணையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தினை சேர்ந்த பிரவீன் மற்றும் சுரேஷ் என்பவர்கள் மெத்தனால் கலந்த விஷசாராயத்தினை குடித்து உயிரிழந்த நிலையில் அப்பகுதியில் அடுக்கடுக்காக மரணங்கள் ஏற்பட்டது. இதில் தற்போதுவரை 60 பேர் உயிரிழந்து இருப்பதாக கூறப்படுகிறது. பலர் கவலைக்கிடமாக இன்னும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதை தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணையை சிபிசிஐடி தொடங்கியது. அதில் இதுவரை 21 பேர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர். முதலில் 3 பேரல்கள் மெத்தனால் கைப்பற்றப்பட்ட நிலையில் பின்னர் 1800 லிட்டர் மெத்தனால் கைப்பற்றப்பட்டது. தற்போது, இதில் 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு போடப்பட்டு இருக்கிறது. 

இக்கூட்டத்திற்கு 19 வயதாகும் மாதேஷ் என்பவர் தான் தலைவராக செயல்பட்டதாக திடுக்கிடும் தகவல் விசாரணையில் தெரிய வந்து இருக்கிறது. மாதேஷையும் விசாரிக்க மனு போடப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டு இருப்பவர்களிடமும் விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. மருத்துவமனையில் சிகிச்சையில் இருப்பவர்களிடமும் சிபிசிஐடி வீடியோ வாக்குமூலங்களை வாங்கி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: இது புதுரகமால்ல இருக்கு – ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் மோசடி… தம்பதியின் பலே ட்ரிக்!

google news
Continue Reading

latest news

சாதிவாரியாக கணக்கெடுப்பு!.. முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்ற

Published

on

stalin

தமிழகத்தில் சாதி வாரியாக கணக்கெடுப்பது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 2021ம் வருடம் துவங்கப்பட வேண்டிய மக்கள் தொகை கணக்கெடுப்பை உடனே துவங்க வேண்டும் எனவும், அதனுடன் சாதிவாரியான கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் ஒரு தனித்தீர்மானம் கொண்டு வந்தார்.

அப்போது பேசிய அவர் ‘2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பை மத்திய அரசு உடனே துவங்க வேண்டும். அதோடு, சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்பு மத்திய அரசின் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறது. கணக்கெடுப்பை மாநில அரசு செய்ய முடியாது. மத்திய அரசே இதை முழுமையாக செய்ய முடியும்.

சமுதாயத்தில் அனைவரும் வளர்ச்சி அடைய வேண்டும் என்பதால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதே திமுகவின் நோக்கம். மேலும், மக்கள் அனைவருக்கும் கல்வி, பொருளாதாரம் மற்றும் வேலை வாய்ப்பில் சம உரிமை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என பேசினார்.

அவர் பேசி முடித்த பின் தனித் தீர்மானம் மீது விவாதமும் நடைபெற்றது. அதன்பின் குரல் வாக்கெடுப்பின் மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

google news
Continue Reading

latest news

அளவாக குடியுங்கள் என ஒரு கட்சி தலைவர் சொல்லலாமா?!… கமலை வாறிய விஜய பிரபாகரன்!…

Published

on

vijaya prabakaran

கடந்த வாரம் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குறித்து பலரும் உயிரிழந்தனர். சிலருக்கு பார்வை போய்விட்டது. எனவே, அரசியல் கட்சியை சேர்ந்த பலரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் பார்த்தனர். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பாஜக தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி என பலரும் அங்கு சென்றனர்.

இதில், மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனும் ஒருவர். பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ‘மக்களை குடிக்க வேண்டாம் என சொல்ல முடியாது. அதை அவர்கள் செய்ய மாட்டார்கள். அளவாக குடியுங்கள் என வேண்டுமானால் அறிவுரை சொல்லலாம். டாஸ்மாக் அருகேயே விழிப்புணர்வு பலகை வைக்கலாம். ஏனெனில், மெடிக்கல் ஷாப்பை விட டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது’ என பேசினார்.

kamal

கமல் எப்போதும் நடைமுறைக்கு என்ன ஒத்து வருமோ அதைத்தான் பேசுவார். அவர் சொன்னதில் தவறு இல்லை என கமல் ரசிகர்கள் சொன்னாலும், கமல் குடிப்பதை ஆதரிக்கிறார், திமுகவுக்கு ஆதரவாக பேசுகிறார் என அதிமுக, பாஜக கட்சியை சேர்ந்தவர்களை அவரை சமூகவலைத்தளங்களில் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

இந்நிலையில், தேமுதிக சார்பில் நடத்தப்பட்ட ஒரு பொதுக்கூட்டத்தில் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன் ‘ மது அருந்துவதே தவறான விஷயம். அளவாக குடியுங்கள்.. கொஞ்சமாக குடியுங்கள்.. என ஒரு கட்சி தலைவரே சொல்வது இளைஞர்களை தவறான பாதைக்கு செல்ல ஊக்குவிக்கும்’ என பேசியிருக்கிறார்.

google news
Continue Reading

latest news

ஆல் இந்தியா பெர்மிட் வண்டிகளுக்கு தடை கூடாது – தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

Published

on

By

ஆல் இந்தியா பெர்மிட்டுடன் இயக்கப்படும் வெளிமாநிலப் பதிவெண் கொண்ட பேருந்துகளை இயக்கத் தமிழ்நாடு அரசு தடை விதிக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

தமிழகம் முழுவதும் அரசுப் பேருந்துகளுக்கு இணையாக தனியார் ஆம்னி பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன. விழாக் காலங்களில் கூடுதல் விலையில் டிக்கெட் விற்பதாக அவ்வப்போது புகாரும் எழுந்து அடங்குவதுண்டு. அதேநேரம், தமிழகத்தில் தமிழ்நாடு பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளைத்தான் இயக்க வேண்டும் என்று போக்குவரத்துத் துறை பல ஆண்டுகளாக ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.

ஆனால், அண்டை மாநிலங்களான புதுச்சேரி, கேரளா, கர்நாடகா தொடங்கி நாகாலாந்து, அசாம் மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் கணிசமாக தமிழ்நாட்டில் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், அரசுக்கு பல கோடி ரூபாய் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.

வெளிமாநில பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை தமிழ்நாட்டில் பதிவு செய்ய போக்குவரத்து ஆணையரகம் 6 மாதங்கள் கால அவகாசம் அளித்திருந்தது. இதேபோல், மூன்று முறை அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில், கூடுதல் அவகாசம் கேட்ட ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் கோரிக்கையை தமிழ்நாடு அரசு நிராகரித்தது. இதனால், தமிழ்நாட்டில் வெளிமாநிலப் பதிவெண் கொண்ட ஆம்னி பேருந்துகளை இயக்கத் தடை விதிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் இந்த முடிவை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு அரசின் இந்த முடிவால் ஆல் இந்தியா பெர்மிட் வைத்திருக்கும் வெளிமாநில பேருந்து உரிமையாளர்களும் பாதிக்கப்படுவதாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

இதைக் குறித்துக் கொண்ட உச்ச நீதிமன்றம், ஆல் இந்தியா பெர்மிட் வைத்திருக்கும் வெளிமாநில பேருந்துகள் இயங்கத் தடை விதிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசுக்கு இடைக்கால உத்தரவிட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் உரிய பதிலளிக்கும்படியும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க: சட்டசபையில் தொடர் அமளி!.. கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம்…

google news
Continue Reading

latest news

சட்டசபையில் தொடர் அமளி!.. கூட்டத்தொடர் முழுவதும் அதிமுக எம்.எல்.ஏக்கள் இடைநீக்கம்…

Published

on

edappadi

கள்ளக்குறிச்சி கர்ணாபுரத்தில் விஷச்சாரயம் அருந்தி கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்துவிட்டனர். இதற்கு திமுக அரசியன் அலட்சியமே காரணம் என அதிமுக தொடர்ந்து சொல்லி வருகிறது. அதோடு, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என சொல்லி தமிழக முழுவதும் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

இந்த சம்பவம் நடந்த நாள் முதலே அதிமுக எம்.எல்.ஏக்கள் கருப்புச்சட்டை அணிந்து சட்டசபைக்கு வர துவங்கினார்கள். கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து தொடர்ந்து சட்டசபையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் கடும் அமளியில் ஈடுபட்டு பின் வெளிநடப்பு செய்வதும் தொடர்ந்து வந்தது.

நேற்று சட்டபையில் கூட்டத்தொடர் துவங்கிய போதும் சபைக்கு வந்த அதிமுகவினர் மீண்டும் கள்ளக்குறிச்சி விவகாரத்தை கையிலெடுத்து கேள்வி கேட்டனர். ஒரு கட்டத்தில் அமளியிலும் ஈடுபட்டனர். இதனால், அதிமுக எம்.எல்.ஏக்கள் வெளியேற்றப்பட்டனர். எனவே, சட்டசபையை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட காரணத்தால் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க அதிமுக உறுப்பினர்களுக்கு ஒருநாள் தடை விதிக்கப்பட்ட்டது.

இந்நிலையில், இன்று அவை துவங்கிய போதும் அதிமுக எம்.ல்.ஏக்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். எனவே, அவை அலுவல்களை நடத்தவிடாமல் தொடர் அமளியில் ஈடுபட்டதால் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார். அதன்பின் சட்டசபையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் ‘வீண் விளம்பரம் தேடுவதிலேயே அதிமுக குறியாக உள்ளது. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உண்மையான அக்கறையுடன் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சட்டசபையில் பேச வாய்ப்பளித்தும் வெளியில் சென்று எதிர்கட்சி தலைவர் பேசியது அவை மாண்புக்கு ஏற்புடையது அல்ல’ என பேசினார்.

google news
Continue Reading

Trending