உலக நாடுகளிடையே நட்புறவினை வளர்க்கும் விதமாக துவங்கப்பட்டது ஒலிம்பிக் போட்டிகள். உலகில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் உற்சாகமாக பங்கற்று விளையாட்டு பிரியர்களிடையே ஒரு புது விதமான உத்வேகத்தை தூண்டி, உலகின் எந்த மூலையில் எத்தனை மணிக்கு நடைபெற்றாலும் போட்டிகளை கண்டு ரசிக்க வைக்கும்.
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை முறையே இந்த போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்திய வீரர்களும் இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று வருவதை வழக்கமாக கொண்டு வருகிறது. ஹாக்கி, கிரிக்கெட், செஸ் போட்டி தொடர்களில் செலுத்தி வருவதைப் போன்ற ஆதிக்கத்தை ஒலிம்பிக்கில் இந்தியா இதுவரை செலுத்தியதில்லை என்றாலும் பதக்கங்களையும் பெற்றும் வந்துள்ளது.
ஹாக்கி விளையாட்டில் ஒரு காலத்தில் உலகையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இந்தியா இப்போது அந்த இடத்திலிருந்து வெளியேறி வெகு நாட்கள் ஆகிறது என்ற ஏக்கம் இந்திய ஹாக்கி ரசிகர்களிடையே இருந்து தான் வருகிறது.
இந்தாண்டு துவங்க உள்ள ஒலிம்பிக் போட்டியில் இருபது ஓவர் உலகக் கோப்பையை வென்று உலக சாம்பியன் பட்டத்தின் மீது இருந்த ஏக்கத்தை தீர்த்து வைத்து இந்திய கிரிக்கெட் ஆடவர் அணியைப் போல ஹாக்கி அணியின் ஆட்டமும் இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உயர்ந்து வருகிறது. எல்லா விதமான விளையாட்டுப் போட்டிகளில் இந்திய விளையாட்டு வீரர்கள் பலரது பெயர்களை என்றும் மறந்து விட முடியாது.
அந்த வகையில் டென்னிஸ் வீரரான லியாண்டர் பயஸ், நாற்பத்தி ஆண்டுகளுக்கு பிறகு ஒலிம்பிக்கில் தக்கம் வென்ற தனி நபர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக இருந்தாலும், ஒலிம்பிக் டென்னிஸ் போட்டியில் பதக்கம் வென்று வந்த முதல் ஆசிய வீரரும் இவரே.
டென்னிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீரரும் இவரே. இவருக்கு முன்னாள் இவரது தந்தை வியஸ் பயஸ் இந்திய ஹாக்கி அணியின் வீரராவார். இந்திய அணி வெள்ளிப் பதக்கம் வென்ற ஒலிம்பிக் போட்டியில் விளையாடியவர் இவர். இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் நாட்டிற்காக பதக்கம் வென்ற தந்தை – மகன் என்ற பெருமையை இன்று வரை தக்க வைத்துள்ளனர்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…