மக்களவைத் தேர்தல் முடிந்த சூட்டோடு விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் சூடு தமிழ்நாடு அரசியல் களத்தில் அனல் வீசத் தொடங்கியிருக்கிறது.
விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி உடல்நலக் குறைவால் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி மறைந்தார். இதையடுத்து, ஏப்ரல் 8-ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிந்த நிலையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் ஜூலை 10-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
வேட்பு மனுத் தாக்கல் ஜூன் 14-ம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில், விவசாய அணிச் செயலாளரான அன்னியூர் சிவாவை வேட்பாளராக அறிவித்து திமுக தேர்தல் வேலைகளை முடுக்கி விட்டுள்ளது. இந்தநிலையில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் அறிவிப்பு பாஜக கூட்டணி மற்றும் அதிமுக கூடாரத்தில் புயலைக் கிளப்பியிருக்கிறது.
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக, தங்களின் கோட்டையாகக் கருதும் விக்கிரவாண்டியில் இம்முறை போட்டியிட ஆர்வம் காட்டுகிறது. அதேபோல், மக்களவைத் தேர்தல் தோல்வியிலிருந்து மீள அந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெல்ல பாஜகவும் முனைப்பு காட்டுகிறது. இதனால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒருமித்த முடிவை எட்டுவதில் சிக்கல் நீடிக்கிறது.
வேட்புமனுத் தாக்கல் தொடங்க 2 நாட்களே இருக்கும் நிலையில், இந்த இழுபறி கூட்டணியையே உடைக்கக் கூடும் என்ற பேச்சும் எழுந்திருக்கிறது. இன்னொருபுறம், மக்களவைத் தேர்தல் தோல்வியினால் சோர்ந்துள்ள அதிமுக தொண்டர்கள், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் எப்படியும் வெற்றிபெற்று விட வேண்டும் என்று பரபரப்பு காட்டுகிறார்கள்.
ஆனால், பாமக கூட்டணியில் இல்லாத நிலையில் இந்தத் தேர்தலில் போட்டியிட்டு கையைச் சுட்டுக் கொள்ள வேண்டாம் என்ற ஒரு ஆலோசனையில் அதிமுக தலைமை ஈடுபட்டிருப்பதாகவும் ஒரு தகவல் கசிந்திருக்கிறது. இதனால், எதேனும் ஒரு காரணம் சொல்லி அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள் ஒரு சில அரசியல் விமர்சகர்கள்.
இதையும் படிங்க: 10 வயது சிறுவனுக்கு தொல்லை கொடுத்த பெண் ஊழியர்… காப்பகத்தில் நடந்த விபரீதம்…
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…