latest news
10 வயது சிறுவனுக்கு தொல்லை கொடுத்த பெண் ஊழியர்… காப்பகத்தில் நடந்த விபரீதம்…
Bodi: தேனி மாவட்டத்தினை சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகள் காப்பக்கத்தில் 10 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவந்த பெண் நிர்வாகி மீது அதிரடி நடவடிக்கை எடுத்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.
போடியில் அருகே இருக்கும் தருமத்துபட்டியில் பெற்றோர்களால் கைவிடப்பட்ட ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் ஒன்று நடத்தப்பட்டு வருகிறது. இதில் 25க்கும் அதிகமாக குழந்தைகள் தங்கி அருகில் இருக்கும் அரசு பள்ளியில் படித்து வருகின்றனர். சில வருடம் முன்னர் தாய் கைவிடப்பட்ட மூன்று குழந்தைகள் இந்த காப்பகத்தில் சேர்க்கப்பட்டனராம்.
அதில் 10 வயதாகும் சிறுவனும் ஒருவன். இவர் அருகில் இருந்த சில்லுமரத்துப்பட்டியில் இருக்கும் அரசுப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான். அவனுக்கு திடீரென உடல்நல பிரச்னை ஏற்பட அவனிடம் பள்ளி ஊழியர் உடனே விசாரித்து இருக்கிறார். அந்த சமயத்தில் தான் அவருக்கு காப்பகத்தின் பெண் நிர்வாகி பாலியல் தொல்லை கொடுத்தார் என அதிர்ச்சி தகவலை கூறி இருக்கிறார்.
உடனே அந்த நிர்வாகி மீது தேனி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகரிடம் புகார் அளிக்கப்பட்டது. போடியை சேர்ந்த பள்ளவராயன்பட்டியை சேர்ந்த வரதராஜன் மனைவி முனீஸ்வரி(28) காப்பகத்தில் வைத்து விசாரித்து இருக்கின்றனர். இதையடுத்து சிறுவனின் புகார் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பாதுகாப்பு அலுவலர் அந்த பெண் மீது போடி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். உடனே விரைந்து காவலர்கள் அந்த நிர்வாகி மீது போக்சோ சட்டத்தின் மீது வழக்கு பதிந்து கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்தனர். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார். இந்த தகவல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: உச்ச கட்ட உரசல்… பாஜக மேலிட ரேடாரில் அண்ணாமலை… பதவி தப்புமா?