Connect with us

latest news

மே மாத விற்பனையில் மாஸ் காட்டிய ஹீரோ மோட்டோகார்ப் – ஐந்து லட்சம் யூனிட்கள் காலி!

Published

on

Hero-Xoom

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இந்திய சந்தையில் முன்னணி வாகன உற்பத்தியாளர் எனும் பட்டத்தை மீண்டும் பெற்று இருக்கிறது. கடந்த மே மாதத்தில் மட்டும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் ஐந்து லட்சத்திற்கும் அதிக யூனிட்களை விற்பனை செய்து இருக்கிறது.

முன்னதாக மார்ச் மாத்தில் ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை ஐந்து லட்சம் யூனிட்களை கடந்த நிலையில், ஏப்ரல் மாத விற்பனை 3 லட்சத்து 96 ஆயிரத்து 107 யூனிட்களாக குறைந்தது. இதை தொடர்ந்து மே மாத விற்பனையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 5 லட்சத்து 19 ஆயிரத்து 474 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.

வருடாந்திர அடிப்படையில், இது 7 சதவீதமும், மாதாந்திர அடிப்படையில் இது 31.1 சதவீதமும் அதிகம் ஆகும். கடந்த ஆண்டு மே மாதத்தில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 5 லட்சத்து 08 ஆயிரத்து 309 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. அந்த வகையில், 2023 மே மாத விற்பனையில் ஹீரோ நிறுவனம் 9 சதவீதம் வளர்ச்சியை பெற்று இருக்கிறது.

Hero-Xtreme

#Hero-Xtreme

வரும் மாதங்களில் விற்பனை அதிகரிக்கும் என்று ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. தற்போது புதிய 400சிசி மோட்டார்சைக்கிள்கள் மற்றும் முற்றிலும் புதிய கரிஸ்மா XMR போன்ற மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஹீரோ மோட்டோகார்ப் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில் புதிய ஹீரோ XMR மோட்டார்சைக்கிள் விற்பனையாளர்களுக்கு மட்டும் காட்சிப்படுத்தப்பட்டது.

கடந்த மாத விற்பனையில் மோட்டார்சைக்கிள்கள் மட்டும் 4 லட்சத்து 89 ஆயிரத்து 336 யூனிட்களாகவும், ஸ்கூட்டர் விற்பனை 30 ஆயிரத்து 138 ஆகவும் பதிவானது. முந்தைய ஆண்டு ஹீரோ நிறுவனம் முறையே 4 லட்சத்து 52 ஆயிரத்து 246 மற்றும் 34 ஆயிரத்து 458 யூனிட்களையும் விற்பனை செய்து இருக்கிறது. ஸ்கூட்டர் விற்பனை ஏப்ரல் மாதத்தை விட அதிகம் ஆகும்.

உள்நாட்டு விற்பனை அதிக யூனிட்கள் பதிவாகும் நிலையில், ஏற்றுமதி நிலவரம் ஹீரோ நிறுவனத்திற்கு பின்னடைவாகவே உள்ளது. கடந்த மாதம் மட்டும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் 11 ஆயிரத்து 165 யூனிட்களை ஏற்றுமதி செய்தது. இது ஏப்ரலில் ஏற்றுமதி செய்யப்பட்ட 9 ஆயிரத்து 923 யூனிட்களை விட அதிகம் ஆகும். கடந்த ஆண்டு மே மாதம் 20 ஆயிரத்து 238 யூனிட்களை ஹீரோ மோட்டோகார்ப் ஏற்றுமதி செய்து இருந்தது.

google news