Categories: latest newstech news

தீபாவளி சேலில் கலக்கும் விவோ 5ஜி போன்… அதுவும் ரொம்ப கம்மி விலையில்… செக் பண்ணி பாருங்க..!

Flipkart தளத்தில் தற்போது பிக் தீபாவளி சேல் நடைபெற்று வருகின்றது இந்த விற்பனையில் மிக குறைந்த விலையில் ஏராளமான செல்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன இதை பயன்படுத்தி தங்களுக்கு வேண்டிய செல்ஃபோன்களை சிறப்பு சலுகையில் வாங்கிக் கொள்ள முடியும் அந்த வகையில் பலரும் எதிர்பார்த்த விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனும் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றது.

பிளிப்கார்ட் தளத்தில் விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 32 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது அந்த வகையில் இந்த செல்போன் வெறும் 12 கிடைக்கின்றது அதுமட்டுமில்லாமல் தேர்வு செய்யப்பட்ட வங்கி காடுகளை பயன்படுத்தினால் மேலும் வாய்ந்த சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகின்றது இதனால் இந்த செல்போனை இன்னும் குறைந்த விலையில் நீங்கள் வாங்கிக் கொள்ள முடியும்

விவோ டி2எக்ஸ் 5ஜி அம்சங்கள்:

6.58-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது. மேலும் 2408 × 1080 பிக்சல்ஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியும் இந்த போனின் டிஸ்ப்ளேவில் இருக்கின்றது. இந்த செல்போனில் பெரிய டிஸ்பிளே வசதி இதில் இருப்பதால் டச் ஸ்கிரீனை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். கேமிங் பிரியர்களுக்கு இந்த செல்போன் மிகச்சிறந்த சாதனமாக இருக்கும்.

மேலும் எல்இடி பிளாஷ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களைக் இது கொண்டிருக்கின்றது. 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் இதில் உள்ளது. கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இதில் இருப்பதால் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த இந்த போனில் எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு உள்ளது.

மேலும் இந்த செல்போனின் கேமராவை பொறுத்தவரையில், 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி bokeh கேமரா சென்சார் என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கின்றது. எனவே இந்த ஸ்மார்ட்போன் உதவியுடன் மிகச்சிறந்த புகைப்படங்களை நம்மால் எடுக்க முடியும். மேலும் முன்பக்க கேமரா 8 எம்பி கொண்டுள்ளதால் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் சிறப்பாக இருக்கும்.

இந்த செல்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 (Dimensity 6020) சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது. இந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6020 சிப்செட் மேம்பட்ட செயல்திறனை வழங்கும். பின்பு ஆண்ட்ராய்டு 13 இயங்குதள வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இந்த போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்ததாக பேட்டரி, விவோ டி2எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி வசதியுடன் வெளிவந்துள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் பேட்டரி பேக்கப் கொடுக்கும் இந்த போன். பின்பு 18 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களும் இந்த செல்போனில் இருக்கின்றது.

அதுமட்டுமில்லாமல் 5ஜி, டூயல்-பேண்ட் வைஃபை,புளூடூத், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல வசதிகள் இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போனின் எடை 184 கிராம். இத்தகைய சிறப்பு அம்சங்கள் கொண்ட செல்போன் பிலிப்கார்ட் பிக் தீபாவளி செயலில் மிக குறைந்த விலையில் கிடைப்பதால் விவோ பிரியர்கள் இதை பயன்படுத்தி தீபாவளிக்கு இந்த செல்போனை வாங்கிக் கொள்ளலாம்.

Ramya Sri

Recent Posts

இன்ஸ்டா போஸ்ட் வெளியிட்ட ரிஷப் பந்த்… ரோகித் சர்மாவ தான் சொல்றாரா…? ஷாக்கில் ரசிகர்கள்..!

இந்திய வீரரான ரிஷப் பந்த் வெளியிட்டு இருக்கும் பதிவானது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தியா வந்திருக்கும் நியூசிலாந்து அணி…

45 seconds ago

ரேஸ்ல நாங்களும் இருக்கோம்!…கிரிக்கெட்டில் கெத்து காட்டும் இந்திய பெண்கள்…

ஐக்கிய அரபு எமீரகத்தில் பெண்களுக்கான இருபது ஓவர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் நடந்து முடிந்தது. தொடர் துவங்கும் முன்னர்…

1 hour ago

18-வது இரட்டை சதம்… ஜாம்பவான்களின் பட்டியல் வரிசையில் இணைந்த புஜாரா…!

18-வது முறையாக இரட்டை சதம் அடித்து புஜாரா சச்சின், பிராட்மேன் போன்ற ஜாம்பவான் பட்டியலில் இணைந்திருக்கின்றார். 90-வது ரஞ்சி கோப்பை…

1 hour ago

மொதல்ல உடம்ப குறைச்சிட்டு வா… சேட்டை செய்த வீரரை வீட்டுக்கு அனுப்பிய மும்பை அணி..!

பிட்னஸ் இல்லாமல் இருந்த வீரரை மும்பை அணி ரஞ்சி கோப்பை அணியில் இருந்து விடுத்து விட்டதாக இருக்கின்றது. இந்திய அணியின்…

2 hours ago

கூகுள் பே, போன் பே ஆப்-க்கு எச்சரிக்கை… யுபிஐ-க்கு பதிலா இத பயன்படுத்திக்கோங்க..!

நாம் தினசரி பயன்படுத்தும் பொருட்களுக்கு யுபியை பேமெண்ட்க்கு பதிலாக யுபிஐ வாலட்டை பயன்படுத்துவது தான் நல்லது என்று நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.…

2 hours ago

மார்க் ஆண்டனியா இது!..இப்படி கூட நடிச்சிருக்காரா?…

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால், எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளியாகிய படம் "மார்க் ஆண்டனி". இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பை பார்த்தி…

3 hours ago