உலக சுற்றுச்சூழல் தினத்தை ஒட்டி ஏசர் நிறுவனம் ஆஸ்பயர் வீரோ 2023 லேப்டாப் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த லேப்டாப் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது என்று ஏசர் நிறுவனம் தெரிவித்து உள்ளது. கடந்த வாரம் ஆஸ்பயர் 5 மாடல் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.
சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானது என்ற அடிப்படையில், இந்த லேப்டாப் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும் ஏசர் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இந்த லேப்டாப் வாங்கும் பட்சத்தில், விற்பனையாகும் ஒவ்வொரு யூனிட்-க்கும் ஒரு மரம் நடுவதாக ஏசர் அறிவித்து இருக்கிறது.
புதிய ஏசர் ஆஸ்பயர் வீரோ மாடலில் 13th Gen இண்டெல் கோர் i3 / i5 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி எஸ்.எஸ்.டி. ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது. இந்த லேப்டாப் 14 இன்ச் Full HD டிஸ்ப்ளே, மைக்ரோசாஃப்ட் ஹோம் மற்றும் ஸ்டூடண்ட் சந்தா மற்றும் விண்டோஸ் 11 ஒ.எஸ். மூலம் இயங்குகிறது. இந்த லேப்டாப்பில் 720 பிக்சல் வெப்கேமரா, டெம்போரல் நாய்ஸ் ரிடக்ஷன், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், 3.5mm ஹெட்போன் ஜாக் உள்ளது.
இத்துடன் யு.எஸ்.பி. டைப் சி போர்ட், தண்டர்போல்ட் 4, HDMI மற்றும் மைக்ரோ யு.எஸ்.பி. ஏ 3.2 போர்ட்கள் கனெக்டிவிட்டிக்காக வழங்கப்படுகிறது. இந்த லேப்டாப்பில் 50 வாட் ஹவர் பேட்டரி மற்றும் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
ஏசர் ஆஸ்பயர் வீரோ அம்சங்கள்:
14 இன்ச் Full HD+ 1920×1080 பிக்சல் IPS ஸ்கிரீன்
ஏசர் Comfyview LED பேக்லிட் TFT LCD பேனல்
16 ஜிபி LPDDR4X ரேம், 512 ஜிபி PCIe Gen4 16Gb/s NVMe SSD
13th Gen இண்டெல் கோர் i5 – 13335 u
இண்டெல் கோர் i3 – 1315U CPU
இண்டெல் ஐரிஸ் Xe கிராஃபிக்ஸ்
720 பிக்சல் HD வெப்கேமரா
ஏசர் பேக்லிட் கீபோர்டு
கைரேகை சென்சார்
1x யு.எஸ்.பி. டைப் சி போர்ட் DC-in
தண்டர்போல்ட் 4 போர்ட்
1x யு.எஸ்.பி. 3.2 போர்ட் மற்றும் பவர் ஆஃப் சார்ஜிங்
1x யு.எஸ்.பி. 3.2 போர்ட்
வைபை 6E, ப்ளூடூத் 5.1, வயர்லெஸ் LAN
50 வாட் ஹவர் பேட்டரி
65 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஏசர் ஆஸ்பயர் வீரோ மாடலின் இண்டெல் கோர் i3 வேரியண்ட் விலை ரூ. 49 ஆயிரத்து 999 என்றும் இண்டெல் கோர் i5 மாடலின் விலை ரூ. 64 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை ஏசர் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…