நாட்டின் முன்னணி டிஜிட்டல் வங்கி சேவையாளரான பேடிஎம் பேமண்ட்ஸ் பேங்க் லிமிடெட் நிறுவனம் தனது பயனர்களுக்கு யுபிஐ லைட் பெயரில் புதிய சேவையை அறிவித்துள்ளது. இதன் மூலம் பயனர்கள் குறைந்த தொகை பண பரிவர்த்தனைகளை கடவுச்சொல் (பாஸ்வேர்ட்) பதிவு செய்யாமல் மேற்கொள்ள முடியும். பயனர்கள் இந்த சேவையை பயன்படுத்தச் செய்யும் நோக்கில் பேடிஎம் அசத்தலான கேஷ்பேக் சலுகையை அறிமுகம் செய்து இருக்கிறது.
யுபிஐ லைட் சேவையின் கீழ் பயனர்கள் அதிகபட்சம் ரூ. 200 வரையிலான தொகையை அதிவேகமாக அனுப்ப முடியும். யுபிஐ லைட் சேவையில் பயனர்கள் அதிகபட்சம் ரூ. 2 ஆயிரம் வரையிலான தொகையை ஒரே நாளில் இரண்டு முறை சேர்த்துக் கொள்ளலாம். அதன்படி தினமும் ரூ. 4 ஆயிரம் வரையிலான தொகையை யுபிஐ லைட் சேவையில் பரிவர்த்தனை செய்யலாம்.
இதன் மூலம் எப்படி கேஷ்பேக் பெற வேண்டும் என்பது பற்றி தொடர்ந்து பார்ப்போம். முதல் முறையாக யுபிஐ லைட் சேவையில் பணத்தை போடும் போது “வெல்கம் பேபேக்” திட்டத்தின் கீழ் பேடிஎம் அதிகபட்சமாக ரூ. 100 வரை கேஷ்பேக் வழங்குகிறது. கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் வழிமுறைகளை பின்பற்றி கேஷ்பேக் தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
யுபிஐ லைட் செட்டப் செய்வது எப்படி?
– பேடிஎம் முகப்பு பக்கத்தின் மேல்புறம் இடதுபக்கமாக இருக்கும் ப்ரோஃபைல் (Profile) ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
– யுபிஐ மற்றும் பேமண்ட் செட்டிங்ஸ் (UPI and Payment Settings) ஆப்ஷனில் யுபிஐ லைட் (UPI Lite) — அதர் செட்டிங்ஸ் (Other Settings) ஆப்ஷன்களை க்ளிக் செய்ய வேண்டும்.
– யுபிஐ லைட் சேவையில் பயன்படுத்த விரும்பும் வங்கி அக்கவுண்ட்-ஐ தேர்வு செய்ய வேண்டும்.
– இனி ஆட் மணி டு ஆக்டிவேட் யுபிஐ லைட் (Add Money to Activate UPI LITE) ஆப்ஷனை தேர்வு செய்து யுபிஐ லைட் சேவையில் சேர்க்க விரும்பும் தொகையை பதிவிட வேண்டும்.
– MPIN பதிவிட்டு உறுதிப்படுத்தியதும், யுபிஐ லைட் அக்கவுண்ட் உருவாக்கப்பட்டு விடும்.
– யுபிஐ லைட் அக்கவுண்ட் உருவாக்கியதும், ஒரே க்ளிக்-இல் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.
யுபிஐ லைட் எவ்வாறு செயல்படுகிறது?
யுபிஐ லைட் பயன்படுத்த முதலில் உங்களது வங்கி கணக்கில் இருந்து ஆப் வாலெட்டுக்கு பணத்தை அனுப்ப வேண்டும். பின் ஏற்கனவே சேர்க்கப்பட்ட தொகையை கொண்டு யுபிஐ லைட் மூலம் பண பரிவர்த்தனைகளை செய்ய முடியும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…