tech news
9 ரூபாய்க்கு அன்லிமிட்டெட் ரீசார்ஜ் பேக் அறிவித்த ஏர்டெல்
ஏர்டெல் நிறுவனம் தனது பயனர்களுக்கு மலிவு விலையில் பிரீபெயிட் ரீசார்ஜ் சலுகையை அறிவித்து இருக்கிறது. இந்த சலுகையின் விசேஷ அம்சம் இது அன்லிமிட்டெட் இண்டர்நெட் தவிர வேறு எந்த பலன்களையும் வழங்கவில்லை என்பது தான்.
இந்த சலுகையில் அன்லிமிடெட் வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். போன்ற பலன்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை. பயனர்கள் ஏர்டெல் ரூ. 9 விலை கொண்ட பிரீபெயிட் சலுகையை அந்நிறுவன வலைதளத்தில் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். அப்படி இந்த சலுகையில் என்ன பலன்கள் வழங்கப்படுகின்றன என்பதை பார்ப்போம்.
ஏர்டெல் ரூ. 9 சலுகை பலன்கள்:
- ரூ. 9 ஏர்டெல் பிரீபெயிட் ரீசார்ஜ் அன்லிமிட்டெட் டேட்டா வழங்குகிறது.
- இந்த பிரீபெயிட் ரீசார்ஜ்-இன் வேலிடிட்டி ஒரு மணி நேரத்திற்கானது ஆகும்.
- ரீசார்ஜ் செய்ததில் இருந்து 60 நிமிடங்களுக்கு வரம்பற்ற இண்டர்நெட் பயன்படுத்தலாம்.
எனினும், பயனர்கள் அதிவேக இணைய வசதியை ஒரு மணி நேரத்திற்கு அதிகபட்சம் 10GB வரை மட்டுமே பயன்படுத்த முடியும். அதன்பிறகு டேட்டா வேகம் 64Kbps ஆக சரிந்துவிடும்.
ஏற்கனவே ரீசார்ஜ் செய்த சலுகையில் டேட்டா பற்றாகுறை ஏற்படும் போதோ அல்லது, அவசர டவுன்லோட் தேவைக்காக அதிக டேட்டா வேண்டும் என்றாலோ ஏர்டெல் ரூ. 9 சலுகையை ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
இதுதவிர ஏர்டெல் நிறுவனம் ரூ. 129 விலையில் வழங்கும் பிரீபெயிட் ரீசார்ஜ் சலுகையில் 10GB டேட்டா வழங்கப்படுகிறது. இதற்கான வேலிடிட்டி பயனர்கள் ஏற்கனவே ரீசார்ஜ் செய்துள்ள சலுகை முடியும் வரை வழங்கப்படுகிறது.