பாரதி ஏர்டெல் நிறுவனம் இந்திய சந்தையில் முன்னணி டெலிகாம் நிறுவனமாக விளங்குகிறது. பயனர்களின் பலதரப்பட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஏராளமான பிரீபெயிட் திட்டங்களை ஏர்டெல் வழங்கி வருகிறது. டேட்டா தேவைகளுக்கு ஏற்ப தனித்துவம் மிக்க திட்டங்களையும் ஏர்டெல் வழங்கி வருகிறது. குறுகிய கால தேவைக்காக பாரதி ஏர்டெல் நிறுவனம் டேட்டா ஆட்-ஆன் திட்டத்தை அறிவித்து இருக்கிறது.
இந்த பிரீபெயிட் திட்டங்கள் ஒரு நாள் வேலிடிட்டி கொண்டுள்ளன. ஆனாலும் அவசர காலத்திற்கு மொபைல் டேட்டாவினை குறைந்த விலையில் வழங்குகின்றன. அதிக டேட்டா, அதிக செலவில் ரிசார்ஜ் செய்ய விரும்பாதவர்களுக்கு இவை பயன்தரும் ஒன்றாக இருக்கும். ஏர்டெல் வழங்கி வரும் டேட்டா பேக் விவரங்கள் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.
ஏர்டெல் ரூ. 29 பிரீபெயிட் திட்டம் அந்நிறுவனத்தின் குறைந்த விலை ரிசார்ஜ் திட்டங்களில் ஒன்றாக சேர்ந்திருக்கிறது. இந்த திட்டத்தில் பயனர்களுக்கு 2 ஜிபி அதிவேக டேட்டா வழங்கப்படுகிறது. இந்த டேட்டா தீர்ந்து போகும் பட்சத்தில் பயனர்களிடம் இருந்து ஒரு MB டேட்டாவுக்கு 50 பைசா வரை கட்டணம் வசூலிக்கப்படும். அன்றாட இணைய தேவைகளான பிரவுசிங், மெசேஜிங் மற்றும் குறைந்த நேரத்திற்கு வீடியோ ஸ்டிரீமிங் உள்ளிட்டவைகளை பூர்த்தி செய்து கொள்ள இந்த பிரீபெயிட் திட்டம் சிறந்ததாக இருக்கும்.
ஏர்டெல் ரூ. 19 திட்டம் எண்ட்ரி லெவல்-டேட்டா பேக் ஆகும். இது 1 ஜிபி டேட்டா வழங்குகிறது. ஏர்டெல் ரூ. 29 திட்டத்தை போன்றே இந்த திட்டத்திலும் பயனர்கள் நிர்ணயிக்கப்பட்ட டேட்டா அளவை கடந்து பயன்படுத்தும், டேட்டா கட்டணம் ஒரு MB-க்கு 50 பைசா வீதம் வசூலிக்கப்படும். சொற்ப அளவிலான டேட்டா தேவைப்படுவோர் இந்த பிரீபெயிட் திட்டத்தை கொண்டு பயன்பெற முடியும்.
ஏர்டெல் ரூ. 58 பிரீபெயிட் திட்டம் பயனர்களுக்கு சற்றே அதிகளவிலான டேட்டாவை வழங்குகிறது. இதில் மொத்தமாக 3 ஜிபி டேட்டா வழங்கப்படும். ஆனால் இதற்கான வேலிடிட்டி பயனர்கள் ஏற்கனவே ரிசார்ஜ் செய்திருக்கும் பிரீபெயிட் திட்டம் முடியும் வரை அமலில் இருக்கும். இந்த பலன்கள் தவிர பயனர்கள் செயலிக்கான பிரத்யேக திட்டமாக 2 ஜிபி டேட்டா கூப்பன் இலவசமாக வழங்கப்படுகிறது.
இலவச டேட்டா கூப்பன் ஏர்டெல் தேங்ஸ் ஆப் மூலம் ரிசார்ஜ் செய்யும் பயனர்களுக்காக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் பயனர்கள் மொத்தத்தில் 5ஜிபி டேட்டா பெற்றுக் கொள்ள முடியும். அவ்வப்போது டேட்டா தேவைப்படுவோர் ரூ. 58 விலையில் கிடைக்கும் டேட்டா பேக் மூலம் பயன்பெறலாம்.
ஒருநாள் வேலிடிட்டி கொண்ட இந்த பிரீபெயிட் திட்டங்கள் பயனர்களுக்கு தனித்துமிக்க சவுகரியத்தை வழங்குகிறது. இவை எதிர்பாராத சூழலில் அவசரமாக டேட்டா தேவைப்படும் போது குறைந்த செலவில் டேட்டா வழங்குகின்றன. இந்த பிரீபெயிட் திட்டங்கள் ஏர்டெல் தேங்ஸ் ஆப் மற்றும் ஏர்டெல் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் கிடைக்கின்றன.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…