Connect with us

tech news

ரூ. 51க்கு ஏர்டெல் அன்லிமிட்டெட் 5ஜி பூஸ்டர் பேக் அறிமுகம்

Published

on

Airtel

இந்திய டெலிகாம் சந்தையில் ரிலையன்ஸ் ஜியோவை தொடர்ந்து ஏர்டெல் நிறுவனமும் தனது பிரீபெயிட் ரீசார்ஜ் திட்டங்களின் விலையை உயர்த்தியது. விலை உயர்வு காரணமாக 2ஜிபி மற்றும் அதைவிட அதிக டேட்டா வழங்கும் ரீசார்ஜ்களில் மட்டுமே ஏர்டெல் அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா வழங்கப்படுகிறது.

இதன் காரணமாக குறைந்த அளவு டேட்டா பயன்படுத்தும் பலரால் ஏர்டெல் அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா பயன்படுத்த முடியாத சூழல் உருவானது. தற்போது வாடிக்கையாளர்களின் இந்த பிரச்சினையை எதிர்கொள்ளும் வகையில் ஏர்டெல் நிறுவனம் புதிதாக பூஸ்டர் பேக் ரீசார்ஜ்களை அறிவித்து இருக்கிறது.

Phone-use-1

புதிய பூஸ்டர் பேக்குகளின் விலை ரூ. 51, ரூ. 101 மற்றும் ரூ. 151 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் வேலிடிட்டி பயனர் ஏற்கனவே ரீசார்ஜ் செய்துள்ள திட்டத்தில் உள்ள வரை வழங்கப்படும். புதிய பூஸ்டர் பேக்குகள் பயனர்களுக்கு தினமும் 1ஜிபி மற்றும் 1.5ஜிபி வரையிலான டேட்டா வழங்குகிறது.

இவற்றை பயனர்கள் ஏற்கனவே உள்ள டேட்டா பேக்குகளுடன் சேர்த்து ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இதன் மூலம் பயனர்கள் குறைந்த டேட்டா வழங்கும் ரீசார்ஜ்களுடன் 5ஜி டேட்டா பூஸ்டர் சேர்க்கும் போது அன்லிமிட்டெட் 5ஜி டேட்டா சேவையை பெற முடியும். அன்லிமிட்டெட் 5ஜி டேட்டாவுடன் இவை பயனர்களுக்கு 3ஜிபி, 6ஜிபி மற்றும் 9ஜிபி வரையிலான டேட்டா வழங்குகிறது.

google news