பல்வேறு பீச்சர்ஸ்களுடன் அமேஸ்ஃபிட் அப் (Amazfit Up) இயர்பட்ஸ் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது இந்த இயர்பட்ஸ் தொடர்பான விலை மற்றும் விற்பனை விவரங்களை குறித்து இந்த தொகுப்பில் நாம் தெரிந்து கொள்வோம்.
தற்போது வரும் இயர்பட்ஸ் மாடல்கள் பலவும் இன் இயர் டிசைனில் வருகின்றன. காம்பேக் டிசைனில் இருந்தாலும் சில நேரங்களில் க்ரிப் கிடைக்காமல் இருக்கின்றது. அதிலும் ஸ்போர்ட்ஸ் பிரியர்களுக்கு சொல்லவே வேண்டாம். அது சிரமமாகத்தான் இருக்கும். இவர்களுக்கு ஏற்ற ஒரு பக்காவான மாடலாக தான் அமேஸ்ஃபிட் அப் இயர்பட்ஸ் வெளியாகி இருக்கின்றது.
ஓப்பன் இயர் டிசைன் மட்டுமில்லாமல் காதுகளில் கிளிப் அப் வசதியும் இதில் இருப்பதால் ரன்னிங் மற்றும் சைக்கிள் போன்ற நேரங்களில் இது க்ரிப் இல்லாமலேயே எளிதில் பொறுத்துக் கொள்ளும் வகையில் இருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் பிஸிக்கல் பட்டன் வருவதால் நெருக்கமான நேரங்களிலும் ஈசியாக நாம் பயன்படுத்த முடியும். இது IPX4 வாட்டர் ரெசிஸ்டன்ட் பேக் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஓபன் இயர்பட்ஸ் பாலிமர் மெட்டீரியலில் டைட்டானியம் நிக்கல் அலாய் கொண்டிருக்கின்றது. டைனமிக் ஒர்க் அவுட்களுக்கு ஏற்ற வகையில் அட்ஜஸ்ட்மென்ட் கொண்ட கிளிப் ஆன் டிசைனில் இது வருகின்றது. பவர் பட்டன் மட்டும் இல்லாமல் டச் கண்ட்ரோலும் இதில் இருக்கின்றது. மியூசிக் கண்ட்ரோல், கால் கண்ட்ரோல் மற்றும் வால்யூம் கண்ட்ரோலும் இதில் செய்து கொள்ள முடியும்.
இந்த அமேஸ்ஃபிட் அப் இயர்பட்ஸ் மாடலில் ப்ளூடூத் காலிங் சப்போர்ட் வசதியும் இருக்கின்றது. எனவே ப்ளூடூத் v53 கனெக்டிவிட்டி மற்றும் ஏஏசி எஸ்பிசி கோடாக் சப்போர்ட்டும் இதில் இருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் ஏஐ ரெடக்ஷன் சப்போர்ட் இந்த இயர்பட்ஸில் கிடைக்கின்றன. இது ஒரு ஏஐ வாய்ஸ் அசிஸ்டன்ட் மாடலாக களமிறங்கி இருக்கின்றது. ஒரே நேரத்தில் மொபைல் லேப்டாப் போன்ற டிவைஸ் களிலும் இதனை கனெக்ட் செய்ய முடியும்.
இந்த மாடலில் பேட்டரி சிஸ்டம் மிகச் சிறப்பாக இருக்கின்றது. இயர்பட்களில் தாலா 50mAh பேட்டரி மற்றும் சார்ஜிங் கேஸில் 440mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு யுஎஸ்பிசி சார்ஜிங் சப்போர்ட் இருக்கின்றது, இதனை முழு சார்ஜ் செய்வதற்கு ஆறு மணி நேரம் தேவைப்படும். ஒருமுறை ஃபுல் சாட் செய்தால் போதும் 18 மணி நேரங்களுக்கு பேக்கப் பெற்றுக் கொள்ள முடியும்.
இதில் ஸ்மார்ட் வாட்ச் கனெக்டிவிட்டியும் உள்ளது. அல்ட்ரா ப்ரீமியம் பீச்சர்களை கொண்டிருக்கும். இதன் விலை 4200க்கு தற்போது கிடைக்கின்றது. குளோபல் மார்க்கெட்டில் இது வெளியாகி இருக்கின்றது. அமேஸ்ஃபிட் தளத்தில் முதலில் இது விற்பனைக்கு கிடைப்பது உறுதி ஆகிவிட்டது. இதனை விரைவில் இந்தியாவில் எதிர்பார்க்கலாம். மேலும் இது பிளாக் கலரில் இருப்பதால் பலருக்கும் பிடித்த வகையில் இருக்கின்றது. அது மட்டும் இல்லாமல் இதில் ஏகப்பட்ட வசதிகள் இருப்பதால் இதனை வாங்குவதற்கு பலரும் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…