Categories: tech news

சூப்பர் டீல்ஸ்.. ஸ்மார்ட்வாட்ச் வாங்க நல்ல சான்ஸ்..

அமேஸ்பிட் நிறுவனம் தனது ஸ்மார்ட்வாட்ச் மாடல்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. விரைவில் துவங்க இருக்கும் அமேசான் பிரைம் டே விற்பனையில் பயனர்கள் அமேஸ்பிட் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களை சூப்பர் சலுகைகளுடன் வாங்கிட முடியும். ஜூலை 21 மற்றும் ஜூலை 22 ஆகிய தேதிகளில் அமேசான் பிரைம் டே விற்பனை நடைபெறுகிறது.

இந்த விற்பனையின் போது பயனர்கள் அமேஸ்பிட் ஸ்மார்ட்வாட்ச் மாடல்களின் மீது 55 சதவீதம் வரை தள்ளுபடி பெற முடியும். இத்துடன் அமேசான் பிரைம் விற்பனையை ஒட்டி அமேஸ்பிட் நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்படும் ஹீலியோ ரிங் சாதனத்தையும் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறப்பு விற்பனையில் ஏராள சலுகைகள் வழங்கப்பட உள்ள நிலையில், அவற்றில் சில தற்போது அறிவிக்கப்பட்டு விட்டன.

அதன்படி ரூ. 19,999 விலை கொண்ட அமேஸ்பிட் ஆக்டிவ் மாடல் 50 சதவீத தள்ளுபடியுடன் ரூ. 9,999 விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. ரக்கட் ஸ்மார்ட்வாட்ச் மாடல் அமேஸ்பிட் ஆக்டிவ் எட்ஜ் 55 சதவீத தள்ளுபடியுடன் ரூ. 8,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் உண்மை விலை ரூ. 19,999 என்பது குறிப்பிடத்தக்கது.

அமேஸ்பிட் பிப் 5 யூனிட்டி மாடலுக்கு ரூ. 3 ஆயிரம் வரை விலை குறைப்பு வழங்கப்படுகிறது. இந்த மாடல் ரூ. 4,999 விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது. அமேஸ்பிட் பேலன்ஸ் மாடலுக்கு 29 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால் இந்த வாட்ச் விலை ரூ. 30,999-இல் இருந்து ரூ. 21,999 வரை குறைகிறது.

சிறப்பு சலுகை மற்றும் தள்ளுபடிகள் ஒருபுறம் இருந்தாலும், அமேஸ்பிட் நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஹீலியோ ரிங் சாதனத்தை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மாடல் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நுகர்வோர் மின்சாதன நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Web Desk

Recent Posts

ரூ. 500-க்கு கிடைக்கும் கியாஸ் சிலிண்டர் பற்றி தெரியுமா?

இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை தொடர்ச்சியாக அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. மேலும், இந்த விலை ஒவ்வொரு மாநிலத்திற்கும்…

6 hours ago

இந்திய புழக்கத்தில் ரூ. 10,000 நோட்டு.. இந்த விஷயம் தெரியுமா?

இந்தியாவில் நமக்கு தெரிந்தவரையில் ரூ. 2000 நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்தது, அவை சில ஆண்டுகளுக்கு முன் மதிப்பிழப்பு செய்யப்பட்டது அனைவரும்…

6 hours ago

முதலமைச்சர் பதிவி ராஜினாமா…சித்தராமையா போட்ட கண்டீஷன்?…

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப்போவதில்லை என திட்டவட்டமாக அறிவித்திருந்தார். அமைச்சர் பதவி வழங்கப்பட்டதற்கு பின்னர்…

9 hours ago

தமிழக அரசுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம்…காட்டாட்சி என விமர்சனம்…

தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை அரசுக்கு கண்டனம் தெரிவித்து…

10 hours ago

அமைச்சரவையில் மாற்றம்?…அன்பரசன் சொன்னது நடக்கப்போகுதா?…திமுகவினர் ஆர்வம்…

தமிழக அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்ற செய்தி கடந்த சில நாட்களாகவே தமிழக அரசியல் வட்டாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தது.…

10 hours ago

ஹர்திக் Red Ball பயிற்சி.. காரணம் இதுதாங்க.. பார்த்திவ் பட்டேல்

இந்திய வீரர் ஹர்திக் பாண்டியா சிவப்பு பந்துடன் பயிற்சியில் ஈடுபடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி…

11 hours ago