அமேசான் வலைதளத்தில் 5ஜி ரெவல்யூஷன் சேல் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. ஏற்கனவே அமேசான் ஃபேப் டிவி ஃபெஸ்ட் சேல் நடைபெற்று வரும் நிலையில், தற்போது 5ஜி ஸ்மார்ட்போன்களுக்காக மற்றொரு சிறப்பு விற்பனை துவங்கி இருக்கிறது.
சிறப்பு விற்பனையின் கீழ் வாடிக்கையாளர்கள் ஏராளமான 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களுக்கு ஜூன் 25 ஆம் தேதி வரை அசத்தலான சலுகை, தள்ளுபடி மற்றும் வங்கி சலுகை போன்ற பலன்களை பெற முடியும். 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கும் சிறப்பு சலுகை விவரங்கள் பட்டியலை கீழே காணலாம்..,
சாம்சங் கேலக்ஸி S23 அல்ட்ரா 5ஜி :
12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் கிரீன் நிற வேரியண்டின் விலை ரூ. 1 லட்சத்து 06 ஆயிரத்து 999 என்று துவங்குகிறது. இத்துடன் ரூ. 10 ஆயிரம் வரை எக்சேன்ஜ் போனஸ், 18 மாதங்கள் வரை வட்டியில்லா மாத தவணை முறை சலுகை வழங்கப்படுகிறது.
சாம்சங் கேலக்ஸி A54 5ஜி :
ஸ்மார்ட்போனின் ஆசம் கிராஃபைட் நிறம், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை சிறப்பு விற்பனையில் ரூ. 33 ஆயிரத்து 499 என்று மாறி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் அதிகபட்சம் 24 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை சலுகையை பெறலாம்.
சாம்சங் கேலக்ஸி Z ஃப்ளிப்4 5ஜி :
பின்க் கோல்டு, 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 76 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இத்துடன் அதிகபட்சம் 9 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை சலுகை வழங்கப்படுகிறது.
ஐகூ நியோ 6 5ஜி டார்க் நோவா :
8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 22 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. ஐகூ Z7s 5ஜி நார்வோ புளூ, 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 17 ஆயிரத்து 499 என்று மாற்றப்பட்டு இருக்கிறது. இத்துடன் மூன்று மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை சலுகை வழங்கப்படுகிறது.
ஐகூ நியோ 7 5ஜி ஃபிராஸ்ட் புளூ :
8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 26 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இத்துடன் ஆறு மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை சலுகை வழங்கப்படுகிறது. ஐகூ 11 5ஜி லெஜன்ட், 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 49 ஆயிரத்து 999 என்று மாற்றப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஒன்பது மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை சலுகை வழங்கப்படுகிறது.
ஒன்பிளஸ் 11 5ஜி எடர்னல் கிரீன் :
8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் ரூ. 59 ஆயிரத்து 999 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் அதிகபட்சம் ஒன்பது மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை சலுகையை பெற முடியும்.
ஒன்பிளஸ் 11R 5ஜி சோனிக் பிளாக் :
8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 38 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இத்துடன் 12 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை சலுகை வழங்கப்படுகிறது. ஒன்பிளஸ் 10T 5ஜி மாடலின் மூன்ஸ்டோன் பிளாக் நிறம், 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 49 ஆயிரத்து 999 என்று மாறி இருக்கிறது. இத்துடன் 12 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை சலுகை வழங்கப்படுகிறது.
வங்கி சலுகைகள் :
அமேசான் 5ஜி ரெவல்யூஷன் சேல்-இல் வாடிக்கையாளர்கள் எஸ்.பி.ஐ. வங்கி கிரெடிட் கார்டு கொண்டு மாத தவணை முறை சலுகையை பயன்படுத்தும் போது 10 சதவீதம் தள்ளுபடி பெற முடியும். இத்துடன் ரூ. 10 ஆயிரம் வரை கூடுதல் எக்சேன்ஜ் போனஸ் வழங்கப்படுகிறது.
இத்துடன் சாம்சங், ஒன்பிளஸ், ஐகூ, சியோமி, ரியல்மி, டெக்னோ மற்றும் பல்வேறு பிராண்டு 5ஜி ஸ்மார்ட்போன் வாங்கும் போது அதிகபட்சம் 24 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவணை முறை சலுகை வழங்கப்படுகிறது. இதில் குறைந்தபட்ச மாத தவணையாத மாதம் ரூ. 1875 நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…