ஆப்பிள் நிறுவனம் தனது Back-to-School ஆஃபர்களை அறிவித்து இருக்கிறது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம். பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து இந்த சலுகைகளை ஆப்பிள் நீண்ட காலமாக வழங்கி வருகிறது.
அந்த வரிசையில், தற்போது கல்லூரி மாணவர்கள் படிப்பை துவங்க இருப்பதை முன்னிட்டு ஆப்பிள் மீண்டும் இந்த Back-to-School ஆஃபர்களை அறிவித்துள்ளது. இதன் மூலம் கல்லூரி மாணவர்கள் மேக் சாதனத்தை வாங்கும் போது ஏர்பாட்ஸ்-ஐ இலவசமாகவும், ஐபேட் வாங்கும் போது ஆப்பிள் பென்சிலையும் இலவசமாக வாங்கிட முடியும்.
மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த சிறப்பு விற்பனையின் போது ஆப்பிள் சாதனங்களை குறுகிய கால தள்ளுபடி விலையில் வாங்கிட முடியும். இதோடு ஆப்பிள் கேர் பிளஸ் சேவையை 20 சதவீதம் வரை தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் வாங்கிடலாம்.
கூடுதலாக மாணவர்கள் தங்களது பழைய ஆப்பிள் சாதனங்களை எக்சேஞ்ச் செய்து புதிய சாதனங்களை வாங்கும் போது வட்டியில்லா மாத தவணை முறை வசதியை பெற முடியும். இந்த சலுகை அதிகபட்சம் 24 மாதங்கள் வரையிலான மாத தவணைகளுக்கு மட்டும் பொருந்தும்.
சிறப்பு சலுகைகள் தவிர ஆப்பிள் நிறுவனம் தனது ஆப்பிள் ஸ்டோர் மையங்களில் மாணவர்கள் எந்த லேப்டாப்-ஐ தேர்வு செய்வது என்பதை விளக்கும் சிறப்பு ஆலோசனை கூட்டங்களை நடத்துகிறது. இதே போன்ற சேவையை ஆப்பிள் நிறுவனம் ஆன்லைனிலும் வழங்குகிறது.
இதில் மாணவர்கள் ஆப்பிள் வல்லுநர்களை தொடர்பு கொண்டு சிறப்பு வசதிகள், அம்சங்கள் மற்றும் செயலிகள் பற்றி அறிந்து கொள்வது மற்றும் தங்களுக்கு தேவையான சாதனங்களை அவர்களது பட்ஜெட்டில் வாங்குவதற்கு ஆலோசனை பெற முடியும்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…