ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய தொழில்நுட்பம் கொண்டு ஐபோன்களில் பேட்டரியை எளிமையாக மாற்றிவிட முடியும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஐபோனின் பேட்டரியை கழற்றும் வழிமுறையை எளிமையாக்கும் வகையில், பேட்டரி கேசிங் டிசைனை மாற்றும் பணிகளில் ஆப்பிள் நிறுவனம் உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
எனினும், இதுகுறித்து ஆப்பிள் சார்பில் இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. புதுவித டிசைன் ஐரோப்பிய யூனியனின் விதிமுறைகளை ஏற்கும் வகையில் இருக்கும் என்று தெரிகிறது. ஐரோப்பிய யூனியனின் மாற்றப்பட்ட விதிகளில் மின்சாதனங்களின் பேட்டரியை கழற்றும் வழிமுறை எளிமையாக்குவதை வலியுறுத்துகிறது.
அதன்படி ஏற்கனவே உள்ள ஸ்டிரிப் ரக பேட்டரி முறையை நீக்கிவிட்டு, அதற்கு மாற்றாக மின்-அதிர்வு மூலம் பேட்டரியை கழற்றும் வழிமுறை கொண்டுவரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தற்போதுள்ள ஐபோன் மாடல்களில் பேட்டரி ஃபாயில் மூலம் சுற்றப்பட்டுள்ளது. இது ஸ்டிரிப்கள் மூலம் ஐபோனின் மெயின் போர்டில் பொருத்தப்பட்டு இருக்கும். இதில் இருந்து பேட்டரியை கழற்றுவது அவ்வளவு எளிமையான நடைமுறை இல்லை.
புதிய தகவல்களின் படி ஆப்பிள் நிறுவனம் எதிர்கால ஐபோன் மாடல்களின் பேட்டரியை ஃபாயிலுக்கு பதிலாக மெட்டல் மூலம் என்கேஸ் செய்யும் என்றும் இதன் மூலம் பேட்டரியை எளிதில் கழற்ற முடியும் என்றும் கூறப்படுகிறது. இந்த வழிமுறை எளிமையாக இருக்கும் என்றாலும், ஆப்பிள் நிறுவனம் தனது பயனர்களிடம் அவர்களது ஐபோனை அவர்களாகவே சரிபார்ப்பதை அறிவுறுத்துவதில்லை.
தற்போதைய தகவல்கள் ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 16 சீரிஸ் மாடல்களில் இத்தகைய பேட்டரியை வழங்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. முன்னதாக இணையத்தில் லீக் ஆன ஐபோன் 16 ப்ரோ பேட்டரியில் மெட்டல் ஷெல் பயன்படுத்தப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…