ஆப்பிள் நிறுவனம் கடந்த 2022 ஆம் ஆண்டு அறிமுகம் செய்த ஐபோன் 14 பிளஸ் விலை முதல் முறையாக ரூ. 60,000-க்கும் கீழ் குறைந்துள்ளது. ப்ளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 55,999 என மாறியுள்ளது. இது அந்த ஸ்மார்ட்போனின் அறிமுக விலையை விட ரூ. 23,901 வரை குறைவு ஆகும்.
ஆப்பிள் இந்தியா வலைதளத்தில் ஐபோன் 14 பிளஸ் பேஸ் மாடலின் விலை ரூ. 79,990 முதல் துவங்குகிறது. ப்ளிகார்ட் தள்ளுபடி மட்டுமின்றி இந்த ஸ்மார்ட்போனை வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 4000 கூடுதல் தள்ளுபடி பெற முடியும்.
சலுகை விவரங்கள்:
ப்ளிப்கார்ட் தளத்தில் தற்போது ஐபோன் 14 பிளஸ் 128GB மாடலின் விலை ரூ. 55,999 என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் HDFC வங்கி கார்டு பயன்படுத்தும் போது ரூ. 4000 கூடுதல் தள்ளுபடி பெற முடியும். இதன் காணமாக இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 51,999 என குறைந்துவிடும்.
மேலும், ஐபோன் 12 அல்லது ஐபோன் 13 வைத்திருப்பின், அதனை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ. 26,000 வரை தள்ளுபடி பெற முடியும். இவை அனைத்தையும் சேர்க்கும் பட்சத்தில் ஐபோன் 14 பிளஸ் விலை ரூ. 30,000-க்கும் குறைந்த விலையில் வாங்கிட முடியும்.
அம்சங்களை பொருத்தவரை ஐபோன் 14 பிளஸ் மாடலில் 6.7 இன்ச் ஸ்கிரீன், A15 பயோனிக் சிப்செட், சக்திவாய்ந்த கேமராக்கள், நீண்டநேர பேட்டரி பேக்கப் போன்ற அம்சங்கள் உள்ளன. இத்துடன் அதிவேக சார்ஜிங் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்ட் வசதியுடன் கிடைக்கிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…