latest news
புது ஐபோன், கம்மி விலை.. ரிலீஸ் எப்போ?
ஆப்பிள் நிறுவனம் புதிய SE மாடலை உருவாக்கி வருவதாகவும், இந்த மாடல் விரைவில் வெளியாகும் என்றும் நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் இரண்டு ஐபோன் SE மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
இவை ஐபோன் SE 4 மற்றும் ஐபோன் SE 4 பிளஸ் என்ற பெயர்களில் விற்பனைக்கு வரும் என்றும் கூறப்படுகிறது. இரண்டு புதிய மாடல்களிலும் சற்றே பெரிய டிஸ்ப்ளே, ஃபேஸ் ஐடி மற்றும் மேம்பட்ட ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் வசதிகள் வழங்கப்படும் என்று தெரிகிறது.
இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களின் படி புதிய ஐபோன் SE சீரிஸ் மாடல்கள் முற்றிலும் புதிய பேக் டிசைன், ரிடிசைன் செய்யப்பட்ட கேமரா, 48MP ஒற்றை லென்ஸ் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இது முந்தைய SE மாடலில் வழங்கப்பட்ட 12MP லென்ஸ்-ஐ விட குறிப்பிடத்தக்க அப்டேட் ஆகும்.
அந்த வகையில், புதிய ஐபோன் SE மாடல் அசத்தலான புகைப்படங்களை எடுக்க வழி செய்யும். இத்துடன் ஏ18 சிப்செட் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இது சாதனம் அதிவேகமாக இருப்பதை உறுதிப்படுத்தும். இத்துடன் ஆப்பிள் இன்டெலிஜன்ஸ் வசதி, 3279mAh பேட்டரி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
புதிய ஐபோன் SE 4 மாடலில் 6.06 இன்ச் டிஸ்ப்ளேவும், ஐபோன் SE 4 பிளஸ் மாடலில் 6.7 இன்ச் OLED டிஸ்ப்ளே வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த மாடல்களில் ஹோம் பட்டனில் டச் ஐடி நீக்கப்பட்டு ஃபேஸ் ஐடி வசதி வழங்கப்படும் என்று தெரிகிறது. விலையை பொருத்தவரை இரு மாடல்களும் இந்திய மதிப்பில் ரூ. 36,000 மற்றும் ரூ. 40,000 முதல் துவங்கலாம்.