latest news
மின்னல் வேக பிராசஸர், முற்றிலும் புதிய iMac அறிமுகம் செய்த ஆப்பிள் – விலை எவ்வளவு?
ஆப்பிள் நிறுவனம் தனது iMac மாடல்களை முற்றிலும் புதிய M4 சிப்செட் மூலம் அப்டேட் செய்துள்ளது. புதிய iMac மாடல் அந்நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக அமைந்துள்ளது. புது iMac மாடல்கள் முன்பை விட 1.7x அதிவேகமானது ஆகும். இதை கொண்டு போட்டோ எடிட் செய்வது, கேமிங் உள்ளிட்டவைகளை முன்பை விட 2.1x வேகமாக செய்துமுடிக்க முடியும்.
புதிய மாடல்களில் 24 இன்ச் 4.5K ரெட்டினா டிஸ்ப்ளே, நானோ டெக்ஸ்ச்சர் கிளாஸ் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. இவை பிரதிபலிப்பு மற்றும் கிளேர் ஆவது குறைத்து தலைசிறந்த தரம் கிடைப்பதை உறுதிப்படுத்துகிறது. இதன் மத்தியில் 12MP சென்டர் ஸ்டேஜ் கேமரா மற்றும் டெஸ்க் வியூ வசதி உள்ளது. இதில் மொத்தம் நான்கு தண்டர்போல்ட் போர்ட்கள் உள்ளன.
இந்த சாதனத்தில் பயனர்கள் அதிகபட்சமாக இரண்டு 6K வெளிப்புற டிஸ்ப்ளேக்களை இணைக்க முடியும். புதிய iMac மாட்களில் 16GB அதிவேகமான யூனிஃபைடு மெமரி வழங்கப்படுகிறது. இதனை 32GB வரை கான்ஃபிகர் செய்யவும் முடியும். இந்த மாடல் மேக் ஓஎஸ் செக்யுயா ஓஎஸ் கொண்டுள்ளது. இத்துடன் மேஜிக் கீபோர்டு, மேஜிக் கீபோர்டு மற்றும் டச் ஐடி, நியூமெரிக் கீபேட் மற்றும் மேஜிக் டிராக்பேட் உள்ளது,
கனெக்டிவிட்டிக்கு வைபை 6E, ப்ளூடூத் 5.3 உள்ளது. இத்துடன் டிஸ்ப்ளே போர்ட், தண்டர்போல்ட் 4, யுஎஸ்பி 4, யுஎஸ்பி 3.1 ஜென் 2 உள்ளிட்டடவை வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய iMac M4 மாடலின் துவக்க விலை ரூ. 1,34,900 என துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 1,94,900 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய iMac மாடல்- கிரீன், எல்லோ, ஆரஞ்சு, பின்க், பர்ப்பில், புளூ மற்றும் சில்வர் என ஏழுவித நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. விற்பனை நவம்பர் மாதம் துவங்குகிறது.