ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் மற்றும் ஐமேக் வாங்கினால் அசத்தல் சலுகை மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. எனினும், இந்த சலுகைகள் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மட்டுமே பொருந்தும். ஜூன் 22 ஆம் தேதி துவங்கிய சிறப்பு சலுகைகள் அக்டோபர் 02 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் அறிவித்து இருக்கிறது.
பயனர்கள் மேக் அல்லது ஐபேட் போன்ற சாதனங்களை கல்வி சார்ந்த சலுகையின் கீழ் வாங்கும் போது இந்த சலுகைகள், அவர்களுக்கு சேமிப்பை வழங்கும். Back to University திட்டத்தின் கீழ் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த சலுகைகள் கொண்டு பயன்பெற முடியும்.
இதில் சலுகைகளை பெற முறையான அடையாள அட்டையை வைத்திருப்பது அவசியம் ஆகும். இந்த திட்டத்தின் கீழ் ஆப்பிள் பொருட்களை வாங்கும் போது, பில் மாணவர்களின் பெயரிலேயே வழங்கப்படும். எனினும், சாதனத்தை செட்டப் செய்ய தனிப்பட்ட முகவரிகளை பயன்படுத்த முடியும்.
இந்த சலுகையின் கீழ் தேர்வு செய்யப்பட்ட மேக் மாடல்களை வாங்கும் போது ஏர்பாட்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. இதேபோன்று ஐபேட் மாடல்களை வாங்கும் போது ஆப்பிள் பென்சில் வழங்கப்படுகிறது. இலவசங்கள் மட்டுமின்றி ஆப்பிள்கேர் பிளஸ் சேவையை பெறுவதற்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி பெற முடியும்.
ஆப்பிள் அறிவித்து இருக்கும் Back to University சலுகையை பயனர்கள், ஆப்பிள் விற்பனையாளர்கள், ஆப்பிள் பி.கே.சி. மற்றும் ஆப்பிள் சகெட் ஸ்டோர்கள் மற்றும் ஆன்லைன் வலைதளங்களில் பயன்படுத்திக் கொள்ள முடியும். இவை தவிர மூன்றாம் ஆப்பிள் விற்பனையாளர்களிடமும், இந்த திட்டத்தின் கீழ் சலுகைகளை பெற முடியும். இங்கு கூடுதல் தள்ளுபடி மற்றும் வங்கி சார்ந்த சலுகைகளும் வழங்கப்படலாம்.
சிறப்பு சலுகையின் விற்பனையின் கீழ் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஆப்பிள் மேக்புக் ஏர் 13 இன்ச் M1 மாடலை ரூ. 10 ஆயிரம் குறைக்கப்பட்டு, ரூ. 89 ஆயிரத்து 900 விலையில் வாங்கிட முடியும். மேக்புக் ஏர் 13 இன்ச் M2 மாடலுக்கும் ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி பெறலாம். அதன்படி இதன் விலை ரூ. 1 லட்சத்து 14 ஆயிரத்து 900-இல் இருந்து ரூ. 1 லட்சத்து 04 ஆயிரத்து 900 என்று மாறி இருக்கிறது.
மேக்புக் ப்ரோ 13 இன்ச், 14 இன்ச் மற்றும் 16 இன்ச் மாடல்களின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 19 ஆயிரத்து 900, ரூ. 1 லட்சத்து 84 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 2 லட்சத்து 29 ஆயிரத்து 900 என்று மாறி இருக்கிறது. இந்த சலுகை இன்றி இந்த சாதனங்களின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 900, ரூ. 1 லட்சத்து 99 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 2 லட்சத்து 49 ஆயிரத்து 900 என்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அனைத்து மேக் மாடல்களுக்கும் இலவசமாக ஏர்பாட்ஸ் வழங்கப்படும் என்று ஆப்பிள் அறிவித்து இருக்கிறது. ஐமேக் மாடல்களுக்கும் இதே போன்ற தள்ளுபடி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி மேக் மினி மாடல் ரூ. 49 ஆயிரத்து 900-இல் இருந்து துவங்குகிறது. ஐமேக் மாடல் விலை ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 900 முதல் துவங்குகிறது.
மேக் ஸ்டூடியோ மற்றும் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட மேக் ப்ரோ M2 சீரிஸ் மாடல்களுக்கு எந்த சலுகையும் வழங்கப்படவில்லை. ஐபேட், ஐபேட் ஏர், ஐபேட் ப்ரோ 11 இன்ச், ஐபேட் ப்ரோ 12.9 இன்ச் மாடல்களின் விலை முறையே ரூ. 54 ஆயிரத்து 900, ரூ. 76 ஆயிரத்து 900 மற்றும் ரூ. 1 லட்சத்து 02 ஆயிரத்து 900 என்று மாறி இருக்கிறது. ஐபேட் மாடல்களுடன் ஆப்பிள் பென்சில் இலவசமாக வழங்கப்படுகிறது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…