latest news
iphone 16 முடியல அதுக்குள்ள iphone 17 மாடலா…? நீங்க கேட்டது போல எல்லாமே இதுல இருக்கு…!
ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் தான் தங்களது ஐபோன் 16 சீரியஸ் மாடலை அறிமுகம் செய்தது. அதன் விற்பனையும் துவங்கியிருக்கும் நிலையில் ஐபோன் வரிசையில் அடுத்ததாக வெளிவர உள்ள புதிய ஐபோன் மாடலான ஐபோன் 17 ஏர் மாடல் பற்றிய தகவல் இணையத்தில் வைரலாகி வருகின்றது. ஐபோன் 16 போன் இப்போது தான் வெளியாகி இந்திய சந்தையில் விற்பனையாகி வரும் நிலையில் ஐபோன் 17 ஏர் பற்றிய விவரங்கள் ஆப்பிள் செல்போன் ரசிகர்களை மிக அதிக அளவில் கவர்ந்துள்ளது.
ஆப்பிள் நிறுவனம் அமைவதில் அறிமுகம் செய்திருக்கும் ஐபோன் 16 சீரியஸ் மாடல் பெரிய அளவிற்கு ஆப்பிள் ரசிகர்களை கவரவில்லை என்று தான் கூற வேண்டும். இது பார்ப்பதற்கு அப்படியே ஐபோன் 15 மாடல் போல இருக்கின்றது சில சாப்ட்வேர் மற்றும் ஹார்டுவேர் மட்டுமே அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கின்றது. இதனால் ஆப்பிள் ஐபோன் சீரியஸ் மக்களிடையே போதிய அளவு வரவேற்பை பெறவில்லை என்று தான் கூற வேண்டும்.
இந்நிலையில் இதனை புரிந்து கொண்ட ஆப்பிள் நிறுவனம் அடுத்த மாடலை மக்களுக்கு ஏற்ற வகையில் அவர்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்று முடிவு செய்து iphone 17 தொடரில் ஆப்பிள் ரசிகர்களை கவரும் வகையில் பல வகையான அம்சங்களை வழங்குவதற்கு முடிவு செய்துள்ளது. அந்த வகையில் ஐபோன் 17 சீரியஸ் மாடலில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் தற்போது வெளியாகி இருக்கின்றன.
iphone 17 ஏர் மாடல் மிகவும் மெலிதான iphone சாதனமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்த சாதனம் 6.6 இன்ச் சூப்பர் ரெடினா டிஸ்ப்ளேவை கொண்டிருக்கும் என்று கூறப்படுகின்றது. அது மட்டும் இல்லாமல் இது இது 120Hz ரெஃப்ரஷ் ரேட் உடன் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தபடியாக இந்த செல்போனில் 48 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை வழங்க ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்து இருக்கின்றது.
இதில் டெலிபோட்டோ லென்ஸ் உடன் கூடுதல் ஜுமிங் ஆதரவு கொண்ட லென்ஸை ஆப்பிள் நிறுவனம் கொடுக்கும் என்று கூறப்படுகின்றது. அதேபோல் முன் பக்கம் 24 மெகாபிக்சல் கேமராவை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஆப்பிள் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் ஆப்பிள் ஐபோன் 17 ஏர் இல் பயோனிக் எ 19 சிப்பை பயன்படுத்தும் என்று கூறப்படுகின்றது.
இதற்கு முன்னோடியான a18 போன்ற 3nm செயல்முறையைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டது. இந்த சிம் செயல்திறன் மற்றும் ஆற்றல் திறன் ஆகியவற்றில் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தும். இந்த செல்போன் வருகை குறித்த தகவல் மிகவும் சஸ்பெண்ட் ஆக வைக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் ஐபோன் 17 ஏர் பல்வேறு அம்சங்கள், கேமரா அமைப்புகள் சக்தி வாய்ந்த செயலி ஆகியவற்றுடன் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு வெளியிட்டாக இது இருக்கும் என்று கூறப்படுகின்றது. தற்போது இந்த செல்போனின் சிறப்பம்சங்கள் வெளியாகி இருப்பதால் அசல் செல்போன் வெளிவந்த பிறகு தான் இதன் உண்மை தெரியும் என்று பலரும் கூறி வருகிறார்கள்.