ஆப்பிள் நிறுவனம் 2024 ஆண்டு புதிய சாதனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதில் ஐபோன் 16 சீரிஸ் மட்டுமின்றி பல்வேறு சாதனங்களும் இடம்பெறும் என்று கூறப்படுகிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் புதிய தகவல்களில் ஆப்பிள் நிறுவனம் தனது மேக் மினி (Mac Mini) சாதனத்தை அப்டேட் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய மேக் மினி மாடலில் M4 சிப்செட் வழங்கப்படும் என்று தெரிகிறது. இதில் ஏஐ சார்ந்த திறன் வழங்கப்படுகிறது. இது தொடர்பாக ஆப்பிள் வல்லுநரான மார்க் குர்மேன் வெளியிட்டுள்ள தகவல்களில் புதிய மேக் சாதனம் ஆப்பிள் உருவாக்கியதிலேயே மிகவும் சிறியதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. 2010 ஆம் ஆண்டில் இருந்து முதல் முறையாக இந்த சாதனம் அதிகளவு டிசைன் மாற்றங்களை கொண்டிருக்கும்.
இந்த சாதனம் அதன் முந்தைய வெர்ஷனை விட அளவில் சிறியதாகவும், ஆப்பிள் டிவி ஸ்டிரீமிங் சாதனத்திற்கு இணையான அளவில் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஆப்பிள் டிவி பாக்ஸ் சாதனம் சரியாக 3.7 இன்ச் அளவில் தான் உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் வரலாற்றில் முதல்முறையாக அந்நிறுவனம் அனைத்து மேக் சாதனங்களிலும் ஒரே சிப்செட் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
புதிய M4 சிப்செட் ஏஐ அம்சங்களை இயக்கும் திறன் கொண்டிருக்கும். இந்த சாதனம் வருகிற அக்டோபர் மாதம் அறிமுகம் செய்யப்படலாம். புதிய மேக் மினி மாடல் அலுமினியம் ஷெல் கொண்டிருக்கும் இது சிறிய அளவிலான ஐபேட் ப்ரோ சாதனமாக இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சர்வதேச சந்தையில் தற்போது விற்பனை செய்யப்படும் மேக் மினி விலை 599 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய சாதனத்தின் விலை தற்போதைய மாடல்களுக்கு இணையாக இருக்குமா அல்லது இதைவிட சற்று அதிகமாகவே நிர்ணயம் செய்யப்படுமா என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது.
முதற்கட்டமாக M4 பிராசஸர் கொண்ட மேக் மினி சாதனமும் அதன்பிறகு மேக்புக் ஏர், மேக்புக் ப்ரோ மற்றும் மேக் ஸ்டூடியோ போன்ற சாதனங்கள் அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட மேக்புக் ஏர் M3 விலை ரூ. 1,14,900 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…