Connect with us

latest news

குறைந்த விலையில் விஷன் ப்ரோ மாடல் – இணையத்தில் லீக் ஆன தகவல்!

Published

on

apple vision pro

ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் நடந்து முடிந்த சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் (WWDC 2023) விஷன் ப்ரோ, ஹெட்செட் மாடலை அறிமுகம் செய்தது. ஏராளமான சென்சார்கள், அதிநவீன கேமரா சிஸ்டம்களுடன் எதிர்கால டிசைன் கொண்டிருக்கும் ஆப்பிள் விஷன் ப்ரோ மாடல், அதன் விலை தவிர அனைத்து அம்சங்களிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

apple vision pro

apple vision pro

அதிக விலை காரணமாக விஷன் ப்ரோ மாடல் பிரீமியம் பிரிவு வாடிக்கையாளர்களை குறிவைத்து அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பலரும் விஷன் ப்ரோ விலை குறித்து வருத்தம் தெரிவித்து இருந்த நிலையில், ஆப்பிள் வல்லுனரான மார்க் குர்மேன் பயனர்களுக்கு நற்செய்தி தெரிவித்துள்ளார். அதன்படி ஆப்பிள் நிறுவனம் தனது விஷன் ப்ரோ ஹெட்செட்-இன் குறைந்த விலை எடிஷனை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

apple vision pro

apple vision pro

குறைந்த விலை ஆப்பிள் விஷன் ப்ரோ மாடல், தற்போது அறிமுகம் செய்யப்பட்ட முதல் தலைமுறை மாடலை தொடர்ந்து அறிமுகம் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. இந்த ஹெட்செட்-இல் அதிவேக பிராசஸர் மற்றும் மேம்பட்ட செயல்திறன் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இரண்டாம் தலைமுறை மாடலாக உருவாகி வரும் புதிய ஹெட்செட் ஆக்மென்டெட் ரியாலிட்டி மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி திறன்களை கொண்டிருக்கும்.

ஆப்பிள் நிறுவனம் புதிய குறைந்த விலை ஏ.ஆர். / வி.ஆர். ஸ்பேஷியல் கம்ப்யூட்டரை 2025 ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்ய இருப்பதாக மார்க் குர்மேன் தெரிவித்து இருக்கிறார். இந்த சாதனம் ஆப்பிள் விஷன் ஒன் அல்லது ஆப்பிள் விஷன் எனும் பெயர்களில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார். தற்போதைய மாடல் விஷன் ப்ரோ என்று அழைக்கப்படுவதால், புதிய குறைந்த விலை மாடல் இந்த பெயரில் அறிமுகம் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

apple vision pro

apple vision pro

முதல் தலைமுறை ஆப்பிள் விஷன் ப்ரோ மாடல் அமெரிக்க சந்தையில் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர இருக்கிறது. இதன் விலை 3 ஆயிரத்து 499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2 லட்சத்து 88 ஆயிரத்து 500 வரை நிர்ணயம் செய்யப்படுகிறது. புதிய குறைந்த விலை ஹெட்செட்டின் விலை முதல் தலைமுறை மாடலை விட பல நூறு டாலர்கள் வரை விலை குறைவாக நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

google news