கல்ட்.ஸ்போர்ட் (Cult.sport) என்ற ஸ்போர்ட்ஸ் பிராண்டானது, விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்களை இலக்காகக் கொண்டு, அதன் புதிய ஸ்மார்ட்வாட்சான, ரேஞ்சர் எக்ஸ்ஆர் -ஐ (Ranger XR) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்வாட்ச் ஒரு உறுதியான, முரட்டுத்தனமான வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
ரேஞ்சர் எக்ஸ்ஆர் ஸ்மார்ட்வாட்ச் ஆனது 100க்கும் மேற்பட்ட வாட்ச் ஃபேஸ்களுடன் கூடிய 1.43 இன்ச் அளவுள்ள அமோலெட் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. ப்ளூடூத் காலிங் வசதியுடன் கூடிய டயல் பேட் உள்ளது. இதனால் பயனர்கள் நேரடியாக வாட்சில் இருந்து கால் செய்ய முடியும்.
இதில் மற்ற ஸ்மார்ட்வாட்ச்களில் இருப்பது பல்வேறு உடல்நலத்தைக் கண்காணிக்கும் அம்சங்களை கொண்டுள்ளது. அதன்படி, ஹார்ட் ரேட் மானிட்டர், SpO2 மானிட்டர், ஸ்லீப் டைமர், ஸ்டெப் கவுண்டர், கலோரி கவுண்டர் மற்றும் ஸ்லீப் கவுண்டர் போன்றவை அடங்கும்.
இதுதவிர, 70க்கும் மேற்பட்ட ஸ்போர்ட் மோட்களைக் கொண்டுள்ளது. டிஜிட்டல் கால்குலேட்டர், பிஎம்ஐ கால்குலேட்டர், அலாரம் கடிகாரம் போன்றவையும் உள்ளது. இதில் இருக்கும் பேட்டரி ஆனது 10 நாட்கள் பேட்டரி ஆயுளை வழங்குகிறது. குறிப்பாக, வாட்சை ஸ்மார்ட்போனில் இருக்கும் கல்ட் ஸ்போர்ட் வாட்ச் ஆப் மூலம் இணைத்துக்கொள்ளலாம்.
கல்ட்.ஸ்போர்ட் ஸ்போர்ட் ரேஞ்சர் எக்ஸ்ஆர் ஸ்மார்ட்வாட்ச் ஆனது நீலம், கருப்பு, பச்சை மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கிறது. இதன் ஆரம்ப விலையானது இந்தியாவில்ரூ. 2,999 ஆகும். இதனை நிறுவனத்தின் இணையதளம் மற்றும் அமேசானில் வாங்கிக்கொள்ளலாம்.
ஹாங் காங் கிரிக்கெட் சிக்சஸ் தொடர் 1992 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் டி20 கிரிக்கெட்…
இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரிஷப் பண்ட் இணைய உள்ளதை சூசகமாக…
இந்திய அணியில் தனது ஃபீல்டிங், பந்து வீச்சு பல நேரங்களில் தனது அதிரடியான பேட்டிங் என தனது திறமையை அடிக்கடி…
பொதுவாக பண்டிகை மற்றும் விஷேச தினங்கள வந்து விட்டாலே போதும் இயல்பை விட மக்கள் நடமாட்டம் வீதிகளில் அதிகமாக காணப்படும்.…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் பலர் வந்து போயிருந்திருக்கின்றனர். அதில் சிலர் மட்டுமே காலம் கடந்து தங்களது பெயர் மக்கள்…
ஐபில் 2025க்கான அணி வீரர்கள் ஏலம் ஆரம்பமாக இருக்கும் நேரத்தில், அணியில் ஏற்கனவே இடம் பிடித்திருக்கும் வீரர்களை மாற்றி அறிவிப்புகளை…